Step into an infinite world of stories
Fiction
“உனக்கு நடனம் ஆட விருப்பமா!” என்று அவர்கள் கேட்டார்கள்.”ஆமாம்” என்றான் சிறுவன்.”விருப்பம் எப்படி வந்தது?” சிறுவன் விழித்தான். “தெரியவில்லை” என்றான் லேசான குழப்பத்துடன்.”நடனமாடும்போது உனக்கு எப்படியிருக்கிறது” என்று அவர்களில் ஒரு பெண் கேட்டார். சிறுவன் சற்று நிதானித்தான். இவர்களுக்கு நான் சொல்வது விளங்குமா என்று யோசிப்பவன் போல், பிறகு தன்னுள் ஆழ்ந்த லயிப்புடன் கண்களில் நட்சத்திரம் மின்னச் சொன்னான் 'சந்தோசமாக இருக்கிறது. நான் வேறு யாராகவோ தோன்றுகிறது. இறக்கை முளைத்த பட்சி பறப்பதுபோல, மேலே மேலே ஆகாசவெளியில். ' ஐயர்லாந்தில் ஓர் எளிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் பத்து வயது மகனை அந்தப் புகழ்பெற்ற நடனப்பள்ளிக்குத் தேர்வு செய்வது உசிதமானதா என்று அதுவரை தயக்கம் காட்டிய நேர்முகத் தேர்வாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். புதிய தரிசனம் கண்டது போல. பிற்காலத்தில் எடிஎலியட் மிகப் புகழ் பெற்ற பாலே டான்ஸர் ஆனான். இதழியல் எழுத்து என்பதும் இந்த தர்மத்துக்கும் சில இலக்கண கோட்பாடுகளுக்கும் உட்பட்டதாக தான் உணர்கிறேன். தமிழ் இதழியலுக்குள் நுழைபவர்கள். இந்தத் தொழிலுக்கு எந்தத் தேர்ச்சியோ பொறுப்புணர்வோ குறைந்தபட்ச பயிற்சியோ தேவையில்லை என்று நினைப்பவர்களாகத் தோன்றுகிறார்கள் தமிழ்வழிக் கல்லூரிகளில் இதழியலைத் தீவிரமாகப் பயில்விக்கும் துறைகள் வரவில்லை. பரபரப்பூட்டும் செய்திகள், சினிமா வம்புகள் ஆகியவற்றை மேம்போக்காக, சுவாரஸ்யமாகச் சொல்வதே இதழியல் என்கிற கருத்து தமிழ்த் தினசரியிலிருந்து வார இதழ்கள் வரை பரவலாக வேரூன்றி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அதனாலேயே எந்த விளரியத்தையும் அழிந்து அலசும் போக்கோ விவாதமோ தமிழில் இல்லை. உலகளாவிய பார்வை நமக்கு ஏற்படாமற்போவது இதனால்தான். நடுநிலை வகிக்க வேண்டிய பத்திரிகைத் துறையினர் சார்பற்று எழுதுவது என்பது சாத்தியமற்றுப்போனது. அதனாலேயே இங்கு மாற்றுச் சிந்தனை உருவாகவில்லை என்பதோடு சார்பற்ற எழுத்து என்பது எவருக்கும் பரிச்சயமில்லாத, புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகிப் போனது சோகம். சார்பற்ற பார்வைக்கு இங்கு அர்த்தமில்லாததாலேயே சினிமாச் செய்திகளில் பத்திரிகை உலகம் தஞ்சம் புகுவதாகத் தோன்றுகிறது. மொழி, அரசியல், சினிமா என்பது தமிழ் மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக சில ஆண்டுகள் முன்வரைக் கருதப்பட்டது. இப்போது நுகர் கலாச்சாரம் அவை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து வருகிறது. தங்களது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசாங்கமோ அதன் தில்லுமுல்லுகளோ காரணமில்லை என்று உணர்ந்த தலைமுறை இது. இந்தத் தலைமுறைக்கு மேம்போக்கான ஆழமற்ற செய்தி கொடுத்தால் போதும். இந்தச் சூழலில் நான் ஒரு பழமை வாதியாக, பொருத்தமற்ற உதிரியாக உணர்கிறேன். பழம் தின்று கொட்டையை உமிழ வேண்டிய வயதில் நான் இதழியலுக்கு வந்தது இந்த அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். தமிழ் எழுத்தாளராக நான் அறியப்பட்டிருந்தாலும் வேற்று மாநிலங்களிலேயே எனது பிறப்பும் படிப்பும் வளர்ப்பும் மூப்பும் சேர்ந்திருந்ததால் தமிழகத்தை நான் நேரில் கண்டு பதிவு செய்ய நேர்ந்தபோது சார்பற்ற பார்வையாக நான் நம்பியது ஒரு அந்நியத் திமிரின் வெளிப்பாடாகச் சிலர் நினைத்திருக்கலாம். என் இதழியல் எழுத்தை யார் எப்படி ஏற்றாலும் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் ஆசிரியையாக நான் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியது எனது எழுத்து வாழ்வின் மிக முக்கியமான கால்கட்டமாக நான் கருதுகிறேன். அந்த ஒன்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியையும் எனது மாணவப் பருவம்போல் உணர்ந்தேன். தமிழகமும் தமிழ் மக்களும் கோவில்களும் காலச்சின்னங்களும் முரண்பாடுகள் மிகுந்த அரசியலும் கண்ணெதிரில் திரிந்த சித்தாந்தங்சுப்பாம் ஜாதிக் கலவரங்களும் தினம் தினம் என்னுள் புதிய சாளரங்களைத் திறந்தன. தமிழகத்தின் பூகோள சுபாச்சார எல்லைகளையெல்லாம் நேரில் சென்று எழுத எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். இந்தத் தொகுப்பில் வெளியாகும் கட்டுரைகள் அநேகமாக இந்தியா டுடே இதழ்களில் எழுதப்பட்டவை. ஆசிரியைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேறு பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளும் இடம் பெருகின்றன. அவற்றில் பல கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானவ. எனது நேர்மை சந்தேகிக்கப்பட்டது என்பதே என்னை வருத்திய விஷயம். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை நான் உணர்வேன். இப்பவும் தில்லியிலோ சென்னையிலோ இந்தியா டுடே அலுவலகத்துள் நான் செல்லும்போது என்னுடன் வேலை பார்த்த அனைவரும் என்னிடம் காட்டும் மதிப்பும் மரியாதையும் பாசமும் நான் கடந்து வந்த பாதை மகத்தானதாகச் சிலிர்ப்பேற்படுத்துகிறது. ஒரு சிறிய காலகட்டத்திற்கேனும் நான் ஒரு முக்கியப் பங்கேற்றேன் என்கிற நிறைவைத் தருகிறது. - வாஸந்தி
Release date
Ebook: 3 January 2020
English
India