Step into an infinite world of stories
Fiction
இது அமெரிக்காவைப் பற்றிய கதை அல்ல. அமெரிக்காவுக்கு விடுக்கிற அழைப்பும் அல்ல.
ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இந்தியாவைப் பற்றி நிறையவே கதைத்து வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக அமெரிக்காவைப் பற்றி நான் ஏதோ தெரிந்து வைத்துக் கொண்டு எழுதுகிற முயற்சியும் அல்ல.
நானறிந்த சமூக வாழ்விலும், நமது அக வாழ்விலும் தெரிகிற பொய்யான, குரூரமான அமெரிக்க முகத்தையே கண்டு நான் மிகவும் கலங்கிப் போகிறேன். அந்தக் கலக்கம் வெறும் மருட்சி அல்ல.
நம் காலத்து இந்தியச் சமூக மனிதன் இந்த இரண்டு முகங்களையும் மாறி மாறிப் பிரதிபலிக்கிறான். கதையில் வருகிற மனிதர்கள் வேறு யாரோ அல்ல; அவர்கள்தான் ஓட்டுப் போடுகிறார்கள். சமூகத்தை நிர்வாகம் செய்கிறார்கள், குடும்பம் நடத்துகிறார்கள். இவை எல்லாவற்றிலும் இந்த இரண்டு முகங்களின் முத்திரையும் சாயலும் ஆழமாய்ப் பிரதிபலிக்கின்றன.
நல்லதும் கெட்டதும் ஒரு மனிதனுக்குள்ளேயே நிகழ்கிற பொழுது அவன் இலக்கியப் பிரச்சினை ஆகிவிடுகிறான். இப்படியான மனிதர்கள் பலர் நிறைந்த ஒரு குடும்பத்தின் கதை இது.
Release date
Ebook: 8 March 2022
English
India