Step into an infinite world of stories
4
Biographies
மாற்றம். இந்த ஒற்றை வார்த்தையைத் தன் அரசியல் கோட்பாடாக முன்னிறுத்தி தன் பிரசாரத்தைத் தொடங்கினார் ஒபாமா. சீறிப்பாய்ந்து வந்தன கண்டனங்கள். வெள்ளை இனத்தை ஒரு கறுப்பரா ஆளவேண்டும்? தன் நடுப்பெயரை ஹுஸேனாகக் கொண்டு இருக்கும் ஒரு கறுப்பின முஸ்லிமிடமா தேசத்தைக் கொடுக்கப்போகிறீர்கள்? ஆமாம். அழுத்தமாக அறிவித்தது அமெரிக்கா. இனத்தையும் நிறத்தையும் சுட்டிக்காட்டி ஒபாமாவை ஒதுக்கியவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்தனர் அமெரிக்கர்கள். ஒபாமாவின் வெற்றியை உலகெங்கிலும் உள்ள கறுப்பின மக்கள் தங்கள் சொந்த வெற்றியாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களை மீட்க வந்த ரட்சகராக ஒபாமா அமெரிக்கர்களால் பார்க்கப்படுகிறார். இதுவரை அமெரிக்காவை ஆண்ட அதிபர்கள் அனைவரையும்விட ஒபாமாவுக்குச் சவால்கள் அதிகம். சிதைந்த பொருளாதாரம். பங்குச்சந்தை வீழ்ச்சி. திவாலாகிக்கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள். நம்பிக்கையிழந்த மக்கள். அனைத்தையும் மாற்றியாகவேண்டும். அனைவரையும். அதுவும், உடனே. பராக் ஒபாமாவின் வெற்றிக்கதையின் வாயிலாக, அமெரிக்க கறுப்பின மக்களின் சரித்திரத்தை பளிச்சென்று படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
© 2009 Kizhakku Pathippagam (Audiobook): 9788184930832
Release date
Audiobook: 1 January 2009
English
India