Step into an infinite world of stories
நான் பிறந்தது முதல் பல தடவைகள் திருவையாறுக்குப் போயிருக்கிறேன். பஞ்சநதீஸ்வரர் கோயிலும், குங்கிலியக் கிணறும், அதன் மங்காத புகையும், அகலமாய் ஓடும் காவிரியும், அந்தப் படித்துறைகளும், நாணற் புதர்களும் எனக்கு மிகவும் பழக்கமானவைதான் என்றாலும், இரண்டு வருஷங்களாக நான் அங்கு போகும்போதெல்லாம் 'என்னைப் பற்றி எழுதேன்' என்று என் காதில் கிசுகிசுக்கும் ஓர் அழகான கிராமத்துப் பெண் கற்பனையில் வளர்ந்து சதா மனசை நெருடத் தொடங்கினாள்.
என்ன எழுதுவது? தொடர்கதையா, சிறுகதையா? ஏதும் நான் தீர்மானித்திராத நிலையில், 'மங்கை’ பத்திரிகையிலிருந்து அன்று அந்தக் கடிதம் வந்தது. 'மங்கையில் ஆரம்பிக்கும் முதல் தொடர்கதை உங்களிடமிருந்து அமைய நாங்கள் விருப்பப்படுகிறோம். எங்கள் ஆசை நிறைவேறுமா?' - என்று உதவி ஆசிரியர் திரு. சாரதி எழுதியிருந்தார்.
நான் யோசிக்கத் தொடங்கினேன். மறுவாரமே திரு. சாரதி விழுப்புரத்திற்கு நேரிலேயே வந்து கதையைக் கேட்டதோடு அல்லாமல், 'உடனே தொடங்குங்கள்' என உற்சாகமும் கொடுத்தார்.
தர்மா - மங்களா - முரளி - எல்லோரும் உருவானதும், “நதியின் வேகத்தோடு...” பிறந்ததும் இப்படித்தான்.
தர்மா - உங்கள் அனைவர் உள்ளத்திலும் தாங்கி நிற்பாள் என்ற நம்பிக்கையோடு இந்த முன்னுரையை முடிக்கிறேன்.
அன்புடன், சிவசங்கரி.
Release date
Ebook: 3 January 2020
English
India