Step into an infinite world of stories
Fiction
நவீன தமிழ்ப் படைப்புகளில் குற்ற இயல் நவீனங்கள் சமீபகாலமாக நிறையவே இடம் பிடித்துக்கொண்டு இருக்கின்றன. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜு, போன்றவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே, மேலை நாட்டுக் குற்ற இயல் தொடர்பான நவீனங்களை, நேரடித் தமிழ் மாற்றம் செய்தோ, தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்குக் கதாபாத்திரங்களையும் அவர்கள் மனநிலையையும் மாற்றியோ, சுவைபட அறிமுகம் செய்துவைத்தார்கள்.
அந்தச் சுவை தொடர்ந்து வளர்ந்து இன்று அமோகச் செழிப்படைந்து விட்டது. வாசகர்களிடையே ரசனையை ஏற்படுத்திவிட்ட பெருமை அவர்களுக்குச் சேரும்.
இந்த நாட்களில் குற்றங்கள் புதுப்புது முறையில் செய்யப்படுவது போல, குற்ற இயல் நவீனங்களைப் படைப்பவர்களும் இன்று புதிது புதிதாகக் கற்பனை செய்து வாசகர்களின் திருப்திக்காகப் பாடுபடுகிறார்கள்: வெற்றியும் பெறுகிறார்கள்.
அப்படி வெற்றி பெறுபவர்களில் நண்பர் என். சி. மோகன்தாஸும் ஒருவர். அவருடைய நவீனங்களைப் படிக்கும்போது அவர் திட்டமிட்டு, ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்தின் விளிம்புகளுக்கப்பால் தன் பாத்திரங்களைச் செல்லவிடாமல் படிப்பவர்கள் நினைவில் ‘ஆரம்பத்திற்கேற்ற முடிவுதான்’ என்ற திருப்தியை ஏற்படுத்திவிடுகிறார்.
சிலர் தங்கள் நவீனங்களை ஆரம்பிக்கும்போது எத்தகைய திட்டங்கள், வரைபடங்கள் போட்டு ஆரம்பித்தாலும், இடையே சில கதாபாத்திரங்கள், எழுது கிறவர்களைப் பயமுறுத்தி விரட்டிவிட்டு, தங்கள் இஷ்டம் போல ஆட ஆரம் பித்து ஆசிரியருக்கு ஐந்தாம் படை வேலை செய்ய முன்வருவதும் உண்டு.
நண்பர் மோகன் தாஸின் கதாபாத்திரங்கள் அவர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றன. இது படைப்பாளியின் வெற்றிக்கு முதற்படி. இவர் படைப்புகளில் சுவை இருக்கும் என்று நம்பிக்கையோடு கையிலெடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாம். கடைசிப் பக்கத்தில் வந்து நிற்கும் போதுமனத்தில் நிறைவு இருக்கும். கட்டுப்பாட்டில் விளைந்த கற்பனைகள் என்று பாராட்டலாம்.
வில்லிவாக்கம்
கோமதி ஸ்வாமிநாதன்
Release date
Ebook: 18 May 2020
English
India