Step into an infinite world of stories
Fiction
மரபில் படைத்ததாலும், வாழ்வின் எழுத்தின் சொல்லின் செம்மைக்குப் படைத்ததாலும் தொல்காப்பியம் காலத்தைவென்று நிற்கிறது. மரபினில் படைத்ததாலும், மக்களை நல்வழிப்படுத்துவதற்காகப் படைத்ததாலும். திருக்குறளும், சங்க இலக்கியங்களும் காலத்தைவென்று நிற்கின்றன. அவற்றைப் போன்றே, மலர்ந்த மொட்டு என்னும் இந்நூல் மரபினில் படைத்ததாலும், தமிழ்மக்கள் நல்வாழ்விற்காக, குறிப்பாக கைம்பெண்ணின் வாழ்வை மலர வைப்பதற்காகப் படைத்ததாலும் இந்நூலும் காலத்தை வென்று நிற்கும். பாவலர் மா.வரதராசனும் காலத்தை வென்று நிற்பார். நிற்றல் வேண்டும் என்று மனமார வாழ்த்தி, அவர் இந்நூல்போல் பல நூல்களைப் படைத்தளித்தல் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
மலர்ந்த மொட்டு! மாணிக்கத் தட்டு!!
குமுகாயக் கருத்துகளை ஆங்காங்கே தெளித்திருக்கிறேன். இயற்கை, புவி வெப்பமடைதல், பெண்பார்த்தல், வரன் பார்த்தல், எளிய மணம், சாதி மறுப்பு, கடவுள் கொள்கை, இனக்காப்பு, மொழிக்காப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, மூடத்தனம் எதிர்ப்பு, காதலின் வலி, கடமையுளம், பெண்பித்து போன்ற கருத்துகள் இந்நூலுள் விரவிக் கிடக்கின்றன... குறுகிய வட்டத்துக்குள்.
அரங்குகளில் கூடப் பாடமுடியாத பல கவிதைகளைத், தடை செய்யப்பட்ட கவிதைகளை இந்நூலுள் சேர்த்து என் ஏக்கத்திற்கு வடிகால் அமைத்துக் கொண்டேன். படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
Release date
Ebook: 20 July 2022
English
India