Step into an infinite world of stories
5
Short stories
கண்ணனின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுத்துகின்ற தலைமையாசிரியர் நல்ல சிறந்த ஆசிரியர்களுக்கு ஓர் அருமையான எடுத்தக்காட்டு. பள்ளியில் உண்டியல் வைத்து சேரும் பணத்தை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவது, மாணவர்களிடம் உயர்பண்பை வளர்க்க “காந்தி நேர்மைக் கடை” தொடங்குவது போன்ற செயல் திட்டங்களை இன்றைக்கும் பள்ளிகளில் செயல்படுத்தலாம். நல்ல விளைவுகள் ஏற்படும்.
கண்ணன் அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் நீதிக்காக நேர்மையாகப் போராடுவதை சிறப்பான நிகழ்ச்சிகள் மூலம் விளக்குகின்றார். கிழவிக்கு உதவித் தொகை பெற்றுத் தருவது, குளத்தைத் தூர்வாருவது போன்ற கண்ணனின் செயல்பாடுகள் பொதுத்தொண்டு செய்ய நல்ல தூண்டுதல்கள்; வழிகாட்டிகள்.
குடிகாரனை ஆசிரியரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கக் கூறுவது சிறிது மிகையானது. இது காந்திய வழியா என்ற கேள்வி எழலாம். ஆனால் குடிகாரனையும் காந்திய வழியில் திருத்த எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
மொத்தத்தில், ”கண்ணன் வழி காந்திவழி” புதினம் ஒரு நல்ல படைப்பு.
Release date
Audiobook: 5 May 2022
English
India