Step into an infinite world of stories
மயிலைநாயகத்துக்குச் சொந்தமான கிரீன் ஹில்ஸ் எஸ்டேட்டை எங்கே திரும்பிப் பார்த்தாலும் பச்சைப்பசேலென்று தெரியும். அவருடைய மகன் இளவரசனை ஒரு விபத்தின் போது கைதி ஒருவன் காப்பாத்துக்கிறான். அவனது குறி எண் கைதி நம்பர் 811. அவன் பெயர் துரைப்பாண்டியன். நாள்கள் ஓடிக்கொண்டிருந்தன. மயிலைநாயகத்தின் மனத்தில் அந்த கைதியின் நினைவு நின்றுவிட்டது. மரண படுக்கையில் தன் மகள் மலர்விழியிடம் அந்த கைதியை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஆனால் மலர்விழிக்கு ஒரு கைதியை வேலைக்கு வைத்து கொள்ள பயமாக இருந்தது. பிறகு அரைமனதுடன் அவனை வேலைக்கு அமர்த்துகிறாள். அவனை அவள் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை முக்கியமாக மலர்விழியின் வருங்கால கணவன் சொல்லழகனுக்கு. சொல்லழகன் அவளிடம் துரைப்பாண்டியானால் பல ஆபத்துக்கள் வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இளவரசன் மட்டும் துரைப்பாண்டியனை முழுமையாக நம்பினான். நாட்கள் கடந்தன. துரைப்பாண்டியன் பண்பிலும் நாகரிகத்திலும் வேளையிலும் அக்கறையிலும் குணத்திலும் சிறந்து விளங்கினான். மலர்விழிக்கு அது அச்சிரியமாக இருந்தது. எப்படி ஒரு கைதியால் சிறந்தவனாக இருக்க முடிகிறது என்று? அவன் என்ன குற்றம் செய்தான்? அதன் மர்மம் என்ன? கடைசியில் என்ன ஆயிற்று? தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில் படித்து ரசியுங்கள்.
Release date
Ebook: 10 December 2020
English
India