Step into an infinite world of stories
“லுக் பிரக்ஞா... உன்னை எனக்குப் பிடிச்சது... கிடைத்த சந்தர்ப்பத்துல பளிச்சுன்னு என் காதலைச் சொல்லிட்டேன்..! இதுக்காகவா இவகிட்ட கண்ணைக் கசக்குனே? பெருசா என்னவோ நடந்துட்ட மாதிரி இவளும் ஃபிலிம் காட்டுறா..! ஏய்... உனக்கும் என்னைப் பிடிச்சதுனால தானே ‘வுட் யூ லைக் டு செலிபரேட் வித் அஸ்..ன்னு தேடி வந்து கூப்பிட்டே..! ஐ ஸ்டில் ரிமெம்பர் யுவர் ஃபேஸ்-ன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது யாரு?
இப்ப சொல்றேன்... மறுபடியும் சொல்றேன்... லவ் யூ... லவ் யூ... லவ் யூ..! என்ன பண்ணமுடியுமோ பண்ணு போ..!”
தன் காதலை மிக அழுத்தமாய் சொன்னவன், உஷ்ணமாய் பார்த்துக்கொண்டே தங்கையிடம் அலைபேசியைத் தூக்கியெறிய...
அதே திமிருடன் அண்ணனை முறைத்தவள், “ஸாரி பிரக்ஞா... நான்...” என்று ஆரம்பிக்கும் முன், அலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
“இனிமே எனக்கும், அவளுக்கும் நடுவுல... நீ வரக்கூடாது... புரியுதா?” என்று மதி ஆவேசமாய் சொல்ல, அதிர்ந்து பார்த்தாள் சுஜேஸ்வரி.
மற்றவை கதையில்!
Release date
Ebook: 15 May 2021
English
India