Step into an infinite world of stories
சனாதன தர்மமாகிய இந்துமதத்தில் இருக்கும் ஆழமான ஆன்மிகத்தைப் பற்றிப் பலரும் தமிழில் பரவலாக அறிந்து கொள்வதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஒலி நூல் தொடரின் அறிமுகப் பகுதி இது. தமிழ் கோரா தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களாக சி.வி.ராஜன் வழங்கிய பல பதில்கள் இந்தத் தொடரில் வரவிருக்கின்றன. இந்த அறிமுகப் பகுதியில் இவ் வொலி நூலைப் பற்றி, இதன் ஆசிரியர் சி.வி. ராஜன் வழங்கும் ஒரு அறிமுகமும், அவரைப் பற்றி தீபிகா வழங்கும் வழங்கும் ஒரு அறிமுகமும் இடம் பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில், ஆன்மிகம் என்றால் என்ன, மதமும் ஆன்மிகமும் எவ்வாறு வேறுபடுகின்றன, சனாதன ஆன்மிகத்தின் அவசியம் என்ன, சனாதன தர்மத்தின் பன்முகங்கள் என்னென்ன, அதிலுள்ள பக்தி, ஞானம், யோகம், வேதாந்தம், கீதை, பிற சாத்திரங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் என்ன, கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்தம் என்ன, சொர்க்கம், நரகம், மோட்சம் பற்றிய கருத்துகள் என்ன, இவை இஸ்லாம், கிறித்துவ மதங்களோடு எப்படி வேறு படுகின்றன, மனிதப் பிறவியின் நோக்கம் என்ன --- என்று பலப் பல கேள்விகளுக்கு விடைகள் இங்கே கிடைக்கும். விடைகளுக்குப் பின் புலமாய் இந்து மதம் தந்த ஆன்மிக மகான்களின் உபதேசங்கள் இருக்கின்றன.
Release date
Audiobook: 15 February 2024
English
India