Step into an infinite world of stories
History
கிரீஸ் எனப்படும் கிரேக்க நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வேதகாலம் முதல் தொடர்பு இருப்பதை சரமா என்னும் நாயின் கதை மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிய கதைகள் உறுதி செய்கின்றன. அதைவிட வியப்பான விஷயம் நிறைய தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் இருப்பதாகும். ஆக, தென் குமரி முதல் வட இமயம் வரை நாம் கிரேக்க நாட்டுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தோம். இது பற்றி நான் 11 ஆண்டுகளாக எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. ஹெர்குலீஸ்-கிருஷ்ணன் கைதிகளில் உள்ள ஒற்றுமை, ஈசாப்-பஞ்சதந்திரக் கதைகளில் உள்ள ஒற்றுமை, ஹோமரின் காவியத்துடன் இதிஹாச காவியங்களின் ஒற்றுமை ஆகியன எல்லோருக்கும் ஆர்வம் ஊட்டக்கூடிய விஷயங்கள் ஆகும்.
வள்ளுவருக்கு சாக்ரடீஸைத் தெரியுமோ, சாக்ரடீஸுக்கு வேதம் தெரியுமோ என்ற வியப்புற்றாகி செய்யும் கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. கிரேக்க மொழியின் வளர்ச்சியை கால முறைப்படி வைத்து ஆராய்ந்தால் தமிழன் பழமை பற்றிய புதிய செய்திகள் கிடைக்கலாம்.
Release date
Ebook: 17 August 2022
English
India