Naane Varuvean Indira Soundarajan
Step into an infinite world of stories
பி.எஸ்ஸி படித்து வேலை கிடைக்காத பார்த்தசாரதி என்ற பாச்சு தன் மாமாவுடன் சேர்ந்து கரண்டி பிடிக்கிறான். கௌரவம் பார்க்கவில்லை. கௌரவம் பார்த்தால் வயிறும் நிறையுமா? சமையல் வேலைக்குச் சென்ற இடத்தில் பத்மகிரியைச் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவன் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. நாமும் பிரத்யங்கராபுரம் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வை எழுப்பும். இந்த நாவலில் மோடிவித்தை, பீதாம்பர ஜாலம் என்று நிறைய வருகிறது. அது உண்மையோ, பொய்யோ நமக்கு கவலை இல்லை. கதை எழுதுவதில் ஆசிரியர் அந்த வித்தைகளை காட்டி நம்மை கதையோடு கட்டிப் போட்டு விடுகிறார்.
Release date
Ebook: 29 November 2022
English
India