Step into an infinite world of stories
4.4
Personal Development
மனிதன் தன்னுள் எண்ணுவது போலவே இருக்கின்றான் என்பது முதுமொழி.
இந்தக் கூற்று மனித இருப்பின் சகல பரிமாணங்களையும் தழுவி நிற்கின்றது. அவன் வாழ்வின் ஒவ்வொறு நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தி நிற்கிறது.
மனிதன் என்பவன் உண்மையிலேயே அவனது எண்ணங்களே. ஒருவரது குணம் என்பது அவரது எல்லா எண்ணங்களின் மொத்தக் கூட்டலே.
விதையிலிருந்தே செடி எழுச்சி பெறுகிறது. விதையின்றிச் செடி துளிர்த்திருக்க வாய்ப்பில்லை.
அவ்வாறே மனிதனின் ஒவ்வொறு செயலும் அவனுள் மறைந்திருக்கும் எண்ணங்கள் என்னும் விதைகளிலிருந்ததே எழுச்சி பெறுகிறது. அவ்வாறின்றி செயல் மலர்ந்திருக்க வாய்ப்பில்லை.
இது தற்செயலான செயல்களுக்கு மட்டுமன்றி திட்டமிட்டு செய்யும் செயல்களுக்கும் சமமாக பொருந்தும்.
செயல் என்பது எண்ணத்தின் மலர்ச்சி. இன்பமும் துன்பமும் அதன் கனிகள். ஆக மனிதன் சேகரிக்கும் சுவையானதும் மற்றும் கசப்பானதுமான அத்தனை கனிகளும் அவனால் பயிரிடப்பட்டவையே.
Release date
Audiobook: 17 September 2021
Tags
English
India