Step into an infinite world of stories
4.6
Biographies
1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன்.
பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர்.
கொலம்பிய சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட.
எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.
Release date
Audiobook: 12 August 2024
English
India