Step into an infinite world of stories
“விக்ரமும் அவன் நண்பன் மனோவும் சேர்ந்து கொண்டு, “வாத்தி கம்மிங்” என்ற பாட்டிற்கு தலை தெறிக்க ஆடிக் கொண்டிருக்க,
கோபமாக விக்ரமின் அறைக்குள் நுழைந்த தேன்மொழி, ஹே! என்ன இப்படி குடிச்சிட்டு ஆடிட்டு இருக்கீங்க? உங்க அப்பா கீழே தானே தூங்குறாங்க? அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்காது? என்று கத்திக் கேட்டாள் தேன்மொழி. ஏனென்றால் பாட்டுச் சத்தம் தான் காதை பிளக்கிறதே!
தேன்மொழி பேசுவதை இன்று தான் கவனிக்கின்றான் விக்ரம். அவள் பேசும் கொஞ்சும் தமிழ் தேனாக இருந்தாலும், அவள் எப்படி தன் அறைக்கே வந்து தன்னை கேள்வி கேட்கலாம் என அவனுக்கு கோபம் தலைக்கு ஏற, சட்டென ஆடுவதை நிறுத்திய விக்ரம்,
ஹோ மேடம் நீங்களா? வாங்க வாங்க! என்ன, உங்களுக்கு பேச கூட வருமா? நான் என்னவோ உங்களை ஊமைனுல நினைச்சேன்! என்று அவளைப் பார்த்து நக்கலடித்தான்.
ஏனோ விக்ரமிற்கு தேன்மொழியைக் கண்டாலே பிடிக்கவில்லை. ராகவன் இவளை கல்யாணம் செய்ய சொல்லி கேட்டதிலிருந்து இவளை கண்டாலே விக்ரமிற்கு ஏதோ செய்கிறது.
தேன்மொழி ஏதும் பதில் பேசாமல் விக்ரமை முறைத்துக் கொண்டே நிற்க,
சரி, இதுக்கு பதில் சொல்லு? என்னோட அப்பா உன்கிட்ட வந்து கம்ப்ளேன்ட் செஞ்சாங்களா? ரொம்ப சத்தமா இருக்குனு? என்று விக்ரமும் அவளை முறைக்க,
நீ ஏன்மா தேவை இல்லாம என் விஷயத்தில் மூக்கை நுழைக்கிற? என்று விக்ரமும் கத்த தொடங்கி விட்டான்.
ஹே! எதுக்கு இப்போ கத்துற? உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லையா? என்று தேன்மொழியும் எகிற,
டேய் மனோ! இங்கே பாருடா கதையை?? எனக்கு மேனர்ஸ் இல்லையாம்!! என்றவன் தேன்மொழியின் அருகில் இன்னும் நெருங்கி நின்று,
ஹலோ! யாருக்கு மேனர்ஸ் இல்ல? உனக்கா இல்லை எனக்கா? எப்போ பார்த்தாலும் ரூம்ல ஒருத்தனோட ஆட்டம் போட்டுட்டு இருக்க? இப்போ பெரிய இவளாட்டம் என்னை கேள்வி கேட்க வந்துட்ட? என்றான் விக்ரம் உக்கிரமாய்!
ஹே! கம் அகென், கம் அகென்! என்ன பேசுற நீ? நான் ஆட்டம் போடுறதை நீ வந்து பார்த்தியா? என்றாள் கண்களில் கனலுடன்!!
அன்னைக்கும் என்கிட்ட எத்தனை பாய் ஃப்ரெண்ட்ஸ்னு கேட்ட? இன்னைக்கும் இப்படி அநாகரீகமா பேசுற? ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு கூட உனக்கு தெரியலை!
சை! உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு! என்னை சொல்லணும், என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள், அங்கிருந்த ரிமோட்டை எடுத்து பாட்டை பட்டென நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே சென்று விட்டாள்.
மனோ, நீ பார்த்தல? பார்த்தல? எப்படி பேசுறாள்னு? ஒன்னு வாயை திறந்து பேசவே மாட்டா இல்ல இப்படி பேசிட்டு இருக்கும் போதே போயிடுறாடா! இவளுக்கு என்னைப் பத்தி முழுசா தெரியலை!! நான் யாருனு இவளுக்கு காட்டுறேன் பாரு!! என்று பேசிக் கொண்டே மனோவின் தோளிலே சரிந்தான் விக்ரம்.
நீ என்னத்தடா காட்டுற விக்கி? அவ தான் உன்னை நல்லா கட்டம் கட்டி காட்டுறா!! என்று நண்பனை கலாய்த்தபடி மனோவும் சோஃபாவில் சரிந்தான்..”
பகலினில் வேலை இரவினில் ஆட்டம் என வாழ்க்கையை ஆர்ப்பாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகன் விக்ரமிற்கு, ஒரு இக்கட்டான சூழலில், தேன்மொழியை திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும் பொழுது என்ன செய்வான்? அதுவும் அவனுக்கு திருமணம் என்ற வார்த்தையே வேப்பங்காயாய் கசக்கும் பொழுது?
தேன்மொழியை பத்தோடு பதினொன்றாக நினைத்து தவிர்த்து விடுவானா இல்லை அவளை திருமணம் செய்து தான் பார்ப்போமே என்று அவனுக்கு தோன்றுமோ??
பிறகு தேன்மொழியின் நிலை!! தாய், தந்தை, சுற்றம் மற்றும் நட்பு என அனைத்தையும் பறிகொடுத்து விட்டு தன்னந்தனியாக இந்தியா வந்தவளுக்கு, வாழ்க்கை என்ன செய்ய காத்திருக்கிறதோ? புது இடத்தையும் சூழலையும் ஏற்றுக் கொண்டாளா? வாழ்க்கை அவளுக்கு முள்ளா மலரா?
இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள கதையை படியுங்கள்!!
Release date
Ebook: 19 October 2021
English
India