Step into an infinite world of stories
Children
காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நம் நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து பல தலங்களில் அருளுரை ஆற்றியிருக்கிறார்கள். ஞானியர், கல்விமான்கள், ஆஸ்திக பிரமுகர்கள் பலர் முன்னிலையில் அவர் ஆற்றியிருக்கும் சொற்பொழிவுகள், பல அரிய, நற்கருத்துகளை கேட்போர் மனங்களில் விதைத்திருக்கின்றன.
குறிப்பாகத் தாம் பங்குபெறும் ஆன்மிகப் பொதுக் கூட்டங்களில் முன் வரிசைகளில் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்களென்றால், அவர்கள் மனம் கவரும் வகையில் சிற்சில கதைகளைச் சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தவும் செய்வார்.
அவ்வாறு பெரியவர் அருளிய சில கதைகளைத் தொகுத்து இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீ ஜயேந்திரர் இப்போது காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்திலுள்ள அதிஷ்டானத்தில் சமாதி கொண்டு நம்மை அசிர்வதித்தபடிதான் இருக்கிறார் என்பது பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை.
உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தோ அல்லது நீங்கள் படித்துச் சொல்லியோ அவர்களுடைய மனதையும், அறிவையும் விசாலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Release date
Ebook: 18 May 2020
English
India