Step into an infinite world of stories
4.4
Short stories
வங்கச் சிறுகதைகள் Vol 2 தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி 11 சிறிய சொல் : சந்தோஷ் குமார் கோஷ் 12. மரம்: ஜோதிரிந்திர நந்தி 13. உயிர்த் தாகம்: சமேரஷ் பாசு 14. நண்பனுக்காக முன்னுரை : பிமல்கர் 15. பாரதநாடு: ரமாபத சௌதுரி 16. சீட்டுக்களாலான வீடுபோல : சையது முஸ்தபா சிராஜ் 17. அந்தி மாலையின் இருமுகங்கள்: மதிநந்தி 18. பஞ்சம்: சுநீல் கங்கோபாத்தியாய் 19. பிழைத்திருப்பதற்காக: பிரபுல்ல ராய் 20. என்னைப் பாருங்கள் : சீர்ஷேந்து முகோபாத்தியாய் 21. பின்புலம்: தேபேஷ் ராய் 22. கதாசிரியர் அறிமுகம்
முன்னுரை ( ஆசிரியர் குறிப்பிலிருந்து ஒரு சில வரிகள் )
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.
வங்கச் சிறுகதைத் துறையில் முதற்பெருங் கலைஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது கையில்தான் சிறுகதை உயிர் பெற்றது, வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது. சிறுகதையின் பல்வேறு அம்சங்களிலும் அவரது கலைத்திறன் ஒளிர்கிறது. காதல், இயற்கை, சமூகப் பிரச்சினைகள், தத்துவம், காவியத்தன்மை, புனைவியல், வரலாறு, கேலி போன்ற பல துறைகளிலும் அவர் அனாயசமாக நடமாடினார். 1890 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரை ஓர் அரை நூற்றாண்டுக் காலம் அவர் சிறுகதைகள் எழுதினார்.
ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.
இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் சிறுகதைகள் வங்காளி மனப்போக்கின் பல்வேறு படிமங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவேதான் இந்தத் தொகுப்பில் சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையில் வெளிவந்துள்ள பல்வகைப் பட்ட சிறுகதைக் கருவூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அருண்குமார் முகோபாத்யாயி வங்கமொழி இலக்கியத்துறை
Translators: S Krishnamurthy
Release date
Audiobook: 9 August 2021
English
India