Step into an infinite world of stories
2
Teens & Young Adult
இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், "நீங்க எந்த காலேஜ்ல படிக்கறீங்க?” என்று எல்லோரும் கேட்கும்படி அழகாய் இருக்க வேண்டும் என்றுதான் எல்லாப் பெண்களும் விரும்புகிறோம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று எல்லோரையும் கவனித்துவிட்டு அலுவலகம் ஓடும் பெண்களால் ஒரு ஐந்து நிமிடம் தனக்கென்று ஒதுக்க முடிகிறதா? வேலை செய்து செய்து அலுத்துக் களைத்து போய், தூங்கினால் போதும் என்று நினைக்கும் பெண்கள் "ஆமாம், உலக அழகிப் போட்டியில் கலந்துக்கப் போறோமாக்கும்.” என்று சலித்துக் கொள்ளலாம்.
ஆனால், அழகு படுத்திக் கொள்வது என்பது வெளிப்பார்வைக்கு செய்து கொள்ளும் அலங்காரம் மட்டும் அல்ல. ஆரோக்யம் சம்பந்தப்பட்டதும் கூட என்று பலர் புரிந்து கொள்வதில்லை.
எண்ணெய் சொட்டும் முகம், பித்த வெடிப்பால் கால் முழுதும் குத்தும் வலி, முடி உதிர்ந்து மண்டையை மறைக்கும் முயற்சிகள், உடைந்து பூச்சி வெட்டோடு காட்சி தரும் நகங்கள், நோயாளியாய்க் காட்டும் கண் கருவளையம், பருக்கள் - இப்படி ஆரோக்யம் சம்பந்தப்பட்ட அழகுப் பிரச்னைகள் தான் எத்தனை எத்தனை! எதையும் சகிக்கப் பழகும் நம் நாட்டுப் பெண்கள் இவற்றையும் சகிக்கப் பழகி விட்டார்கள்.
மாறாக, ஓர் அரை மணி நேரம் உங்களுக்கென்று ஒதுக்கப் பழகுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் அழகும் ஆரோக்யமும் எப்படிப் பொலிவாய் விளங்குகிறது என்று!
என்ன சரியா?
இனி, உங்கள் சருமம், தலைமுடி, உங்களை அழகு செய்து கொள்ளும் விதம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?...
Release date
Ebook: 11 December 2019
English
India