Step into an infinite world of stories
3
Religion & Spirituality
“தோடுடைய செவியன் விடையேறி யோர்
தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என்
உள்ளம் கவர் கள்வன்!”
மூன்று வயது பாலகனாய் சம்பந்தர் பெருமான் பாடிய இப்பாடல்... உலகிற்கே அம்மையப்பராய் விளங்கும் ஈசனின் சிறப்பை... அவர்மீது அடியார் கொண்ட அன்பினை... என் மனம் கவர்ந்த அன்புத் தந்தை பற்றி உணர்த்தும் உளம் கவர்ந்த இனிய வரிகள்!
சிவம் என்றால் மங்கலம், அன்பு, ஞானம், கருணை, முக்தி என்று பொருள்!
ஆதி அந்தமிலா அந்த இறைவனை...
சொல்லுதற்கியலா குணங்கள் படைத்த நாதனை…
வார்த்தைகளால் விவரிக்க இயலா அற்புதத்தை....
எந்தன் உயிர்த் தந்தையாம் ஈசனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முனைந்தபோது, அதற்கு உதவியாக இருந்த அனைத்து ஆன்மிக அன்பர்களுக்கும், 'பதினெண் புராணங்கள்', 'சிவபராக்கிரமம்', 'சிவஞானபோதம்', 'உண்மை விளக்கம்', 'பன்னிரு திருமுறைத் திரட்டு', 'சிவக் களஞ்சியம்', 'இந்து மத தத்துவங்கள்', 'தேவி பாகவதம்' போன்ற ஆன்மிக நூல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
“சிவம் அவர் என் சிந்தையில் நின்ற அதனால்
அவரருளாலே அவர்தாள் வணங்கி...”
யாவுமான அந்த சிவப்பரம் பொருளுக்கு...
ஆசைகளை நீக்கி, மன அழுக்குகளைப் போக்கி,
பாவங்களை அழித்து, நமக்குள் பக்குவத்தைச் சேர்த்து
அனலின் வடிவாய் என் இதயத்துள் வாழும்
என் ஆருயிர்த் தந்தையாம் சர்வேசுரனுக்கு...
“அழகிய குளிர்நிலவை முடியில்
அணிந்த எழிற்கோலனுக்கு...
கொடும்பாம்பாம் நாகராஜனை
கழுத்தில் சூடிய வேதராஜனுக்கு...
பரிவேங்கை தோலணிந்த மூன்று நயனன்
பரம் பொருளாம் மகாலிங்கத்துக்கு...”
இந்த 'அன்பே சிவம்' எனும் நூலைக் காணிக்கையாக்கி சமர்ப்பணமும் செய்கிறேன். நன்றி!
- உமா பாலகுமார்
Release date
Ebook: 3 January 2020
English
India