Step into an infinite world of stories
Short stories
தான் அறிமுகப்படுத்திய கதாநாயகி, தனக்கே வினையாய் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு என்று அவளோடு ஒப்பந்தம் போடாதது தவறாய்ப் போனது என்பதை அவன் உணர்கிறான். அவளின் மார்க்கெட் பிய்த்துக் கொண்டு போவதை எண்ணி பொறாமை கொள்கிறான். இவனிடம் இருந்த பி.ஏ., அவளிடம் சென்று ஒட்டிக் கொண்டதை எண்ணிப் பொறுமுகிறான். சொத்துக்களை விற்று, பங்களாவை அடகு வைத்து ஒரு சொந்தப்படம் எடுத்து அதன் மூலம் எப்படியும் மறுபடியும் நிமிர்ந்து விட வேண்டும் என்கிற வெறி வருகிறது. அதற்குள் வில்லன் வேடம், வயதானவன் வேடம் என்று வந்து கேட்பவர்களிடம் தன் நிலை கருதி ஒப்புக் கொள்ள முடியாமல் தவித்து, பொறாமை கொள்கிறான். அது அவன் அறிமுகப்படுத்திய அவளைக் கொல்வதில் சென்று முடிகிறது. பிரபலமாய் இருந்த காலத்தில் அவனையும், அவளையும் இணைத்து வெளி வந்திருந்த ஒரு “கிசு...கிசு...” அதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
Release date
Ebook: 18 May 2020
English
India