Step into an infinite world of stories
அக்னி நட்சத்திரம் போல அருகில் இருப்பவரை அதிலும் குறிப்பாக பெண்களை சுட்டெரிக்கும் குண இயல்பு கொண்டவன் ஆதித்தன். எதிர்மறை சிந்தனை கொண்டவன் சிடு சிடுவென இருப்பான்.
அமைதியான நதி போல எல்லாரிடமும் இன்சொல் பேசி பழகுபவள் சந்தியா. நேர்மறை சிந்தனைகளை கொண்டவள் சிரித்த முகமாக இருப்பாள். இருவரும் வாழ்வில் சின்னஞ்சிறு பருவத்தில் பாதிக்கப்பட்டவர்கள். ஆதித்தனின் தாய் அவன் குழந்தையாக இருக்கும் போது வேறு ஒருவனுடன் ஓடிவிடுகிறாள். ஆதித்தனின் தந்தை மறுமணம் செய்து கொண்டு ஆதித்தனின் கைவிடுகிறார். அவன் தாத்தாவின் பராமரிப்பில் படித்து வளர்ந்து உயர்ந்து வேலையில் அமர்கிறான். சந்தியாவின் தந்தையோ வேறு ஒரு பெண்ணை வீட்டுக்குகே அழைத்து வந்துவிடுகிறார். சந்தியாவின் தாய் சுயமரியாதையுடன் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி மெஸ் ஒன்றை நடத்தி மகளை படிக்க வைத்து வேலையில் அமர வைக்கிறார். எதிர்மறை துருவங்களான இருவரும் ஒருநாள் சந்திக்கிறார்கள்.
எதிர்மறை துருவங்கள் ஈர்க்கும் என்பது அறிவியலின் வேதியியல் விதி. ஈர்க்கவும் செய்கின்றன என்ன ஆகிறது என்பதுதான் கதை.
Release date
Ebook: 11 January 2021
English
India