Step into an infinite world of stories
Fiction
நாடகங்களை எழுதுவதற்கு கதையும் கதா பாத்திரங்களும் எப்படி உருவாகிறார்கள் என யோசித்துப் பார்த்தால், கதைகள் நம்மை சுற்றியே நிகழ்கின்றன! கதா மாந்தர்களும் நம் அருகிலேயே வளைய வருகிறார்கள்!
அப்படி ஒரு Character தான் இந்த சத்யா! இவனை நான் பம்பாயில் சந்தித்தேன்.
எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் பழக இனியவன், பரோபகாரி.
உயிர் காப்பான் தோழன் என்பதற்கு பல சந்தர்ப்பங்களில் உதாரணமாக இருந்துள்ளான்.
இவனிடம் ஒரு பலவீனம் தன்னால் முடியாது என எதையும் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டான்!
ஒப்புக் கொண்டதை முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவான்! எதையும் புனைந்து சொல்வான்!
அந்த புனைந்துரைதான் உண்மையென சத்யம் செய்வான்!
பல நேரங்களில் அவனைத் தூண்டும் நண்பர்களின் சுயநலமும் இதில் ஒரு பங்கு பெறும்!!
சங்கிலி தொடர்போல பொய்கள் மாலையாகி நார் முடிச்சாகும் போது சம்மந்த மில்லாதவர்கள் விழி பிதுங்க இவன் வேறு ஒரு கற்பனையில் இருப்பான்.
ஆனால் நான் சத்தியமாக சொல்வேன் அவனது நோக்கத்தில் எந்த தீய எண்ணமும் இருக்காது
இப்படிப்பட்ட சத்யாக்களை I mean அசத்யாக்களை சுற்றி பின்னப்பட்டதுதான் இந்த நாடகம் (அ) சத்யா
Release date
Ebook: 12 August 2021
English
India