Step into an infinite world of stories
Fiction
1932 முதல் ஆனந்த விகடன் மூலம் எழுதத் தொடங்கிய தேவன் இருபத்தைந்து ஆண்டுகளாக ஏராளமான கதைகள் கட்டுரைகளை எழுதி தனக்கென ஒரு வாசகர் கூட்டத்தையே உருவாக்கினார். இப்படிப்பட்ட வாசகர்களின் கூட்டம் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! ஏனெனில் அவருடைய எழுத்துக்கள் காலத்தால் அழியாதது. ஆனந்த விகடனின் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் எஸ்.வி.வி.யும், தேவனும் ஆவார்கள். இவர்கள் ஆனந்த விகடனில் தொடர் கதைகளை எழுதும்போது, ஒவ்வொரு வீட்டிலும், 'யார் முதலில் படிப்பது?' என்று பெரிய யுத்தமே நடக்குமாம்; அப்படிப்பட்ட ஒரு குதூகலம்.
பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி., தேவன் எழுத்துக்களைப் படித்து ஆங்கில மோகத்தையே விட்டொழித்தனராம். தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு, பல அபத்தங்களைச் செய்துவரும் இன்றை மாமனிதர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.
வருடங்கள் பல மறைந்தாலும், தேவனுடைய எழுத்துக்களும், இருப்பதில் தான் ஆச்சரியமா!
படித்துத்தான் பாருங்களேன்.
Release date
Ebook: 23 December 2019
English
India