Step into an infinite world of stories
Thrillers
ஜோதிக் கொம்பை மலைக் கிராமத்தில் அவ்வூர் மக்கள் இதுவரையில் கண்டிடாத அளவிற்கு வினோதமான காய்ச்சலும், வித்தியாசமான வியாதிகளும் வந்து கொண்டேயிருக்க, உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவ்வூரை ராக்காவல் காக்கும் ரங்கத்தான், அதன் காரணத்தை ஆராய்கிறான். ஒரு நாள் அதைக் கண்டுபிடித்ததும் ஆடிப் போகிறான். நகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை தன் மருத்துவக் கழிவுகள் அந்த மலைக் கிராமத்தின் பள்ளத்தாக்கில் டன் கணக்கில் கொட்டி சுற்றுச் சூழலை ஆண்டுக் கணக்கில் பாதித்து வந்துள்ளது.
அக்குற்றத்தை வெளிக் கொணர முயன்ற அந்த ராக்காவல் ஆள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவக் கழிவோடு கழிவாய் புதைக்கப்படுகிறான். ஆனால் அவனை ஒரு வயதான டாக்டர் காப்பாற்றுகிறார். அவரிடம் அவன் உண்மையைச் சொல்ல, அவர் பிரைவேட் டிடெக்டிவ் சூர்யாவிடம் அப்பொறுப்பைத் தருகிறார்.
சூர்யா அந்தப் பிரச்சினையைத் துருவியதில், மருத்துவக் கழிவுகள், ராக்காவலை மரணத்திலிருந்து காப்பாற்றிய, அதே டாக்டரின் மருத்துவமனையிலிருந்துதான் செல்கின்றன, என்பதைக் கண்டுபிடிக்கிறான்.
அடுத்து நடந்தது என்ன?
நாவலைப் படியுங்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India