Step into an infinite world of stories
Fiction
சுதந்திரம் வந்துவிட்டது, பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எழுதாத பத்திரிகை இல்லை, பேசாத மக்கள் இல்லை இன்று. எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கிறது “சுதந்திரப் பள்ளு.” பாரதியை, அவர் வாழ்ந்த காலத்தில் அநேக வைதீக விமர்சகர்கள், தற்கால நல உரிமைகளை குறிக்கோளாகக் கொண்டே கவி புனைந்திருக்கிறார் என்று குறை கூறினர்.
இலக்கணம் அறியாத கவிஞன் என்று நன்னூல் பண்டிதர்கள் அகம்பாவ வெறியில் வாய்க்கொழுப்போடு ஆதாரமின்றி அர்த்தமற்றுப் பேசினர், வெறும் தேசியக் கவி என்று பலர் அவமதிப்போடு பார்த்தனர். பெண் விடுதலைப் பித்தன் என்று சிலர் ஆத்திரப்பட்டனர். கஞ்சாப் புலவன் என்று இளக்காரமாக ஏசினவர்களும் உண்டு. அவர் காலஞ்சென்றபின், கொஞ்ச காலத்திற்கு முன்கூட, பாரதி மகாகவியா அல்லவா என்ற விவாதம் அமர்க்களப்பட்டது எழுத்தாளர்களிடையில்.
Release date
Ebook: 3 March 2023
English
India