Step into an infinite world of stories
Fiction
பாரதியின் பெருமை, தனிச்சிறப்பு தேசீய இயக்கத்தின் மகத்துவத்தை அல்லது விரிந்து பரந்த தேசீய இயக்கத்தை, அதனுடைய பன்முகங்களிலும் கண்டதிலேயே அடங்கியிருக்கிறது. அரசியல் சுதந்திரத்தைப்பற்றி அருமையாகப் பாடிய கவிஞன் என்றே, பொதுப்படையாக அடிக்கடி பாராட்டப்படுகிறான் பாரதி. அவனுடைய எழுத்துத் திருப்பணியில் ஒரு பகுதிதான் இது. பாரதியைப்பற்றி அறிய வேண்டுமானால், தேசீய இயக்கம் பூராவையும், அதன் எல்லாத் துறைகளையும், சகல அம்சங்களையும் அதன் வலு, வலுவின்மைகளையும் இறுதியாக அது எத்திக்கை நோக்கி முன்னேறி வந்துள்ளதென்பதையும் அறிந்து தீரவேண்டும். ஒரேயடியாக, காலத்தைத் தாண்டி எந்த மனிதனும் வாழமுடியாது. எத்துணை தீர்க்கதரிசியாயினும் கால வரம்புகளை முற்றும் மீறிச் சென்றுவிட முடியாது. கவிஞனும் மனிதன் தானே! இந்த உண்மையை மறந்து விடாமல் பாரதியை ஆராய்ந்தால், பாரதியின் பெருமை இன்னும் அதிகரிக்கும்.
Release date
Ebook: 3 March 2023
English
India