Step into an infinite world of stories
Fiction
நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள “மதமும் - மனித வாழ்வும்” என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவ பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும் இழையோட்டி தமிழ் மக்களுக்கு வழங்கிய மேதை தோழர் ஜீவா. அவருடைய கருத்து செலுத்தப்பட்டு, தமிழ் இலக்கியமும் சிறப்புப் பெற்றது.
மதம் மக்களை மயக்கும் அபின். இருப்பினும் விஞ்ஞான ரீதியில் மத ஆதிக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது மனித சமுதாய மாறுதலின் மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பிரச்சினையாகும். பொருளாதார அமைப்பிலும், அரசியலிலும் சுரண்டுகிற வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாயத்தில், மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆஸ்திகப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்தும். மதமும் கடவுளும், சுரண்டுகிற வர்க்கங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அபயம் புகும் கடைசி ஆயுதம் ஆகும். எனினும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களாகிய தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பகுதி, மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், தலைவிதியின் பெயரால், புண்ணியம் பாவத்தின் பெயரால், நல்வினை - தீவினையின் பெயரால், மூடநம்பிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க இடமளிக்காதவாறு மதம், கடவுள், மூடநம்பிக்கை போன்றவைகளை எதிர்த்துப் போராடி இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற முறைகள், வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதற்கு உட்பட்டிருக்கவேண்டும்.
Release date
Ebook: 3 March 2023
English
India