Step into an infinite world of stories
Religion & Spirituality
தமிழகத்தில் எந்த அளவுக்குத் திருக்கோயில்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு சித்த புருஷர்களின் ஜீவ சமாதிகளும் உள்ளன. பௌர்ணமி, அமாவாசை, வியாழக்கிழமை மற்றும் குருபூஜை தினங்களில் அங்கே வழிபாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. உள்ளூர் பக்தர்கள் உட்பட திரளான அன்பர்கள் இந்த அதிஷ்டான வழிபாட்டில் கலந்துகொண்டு மகானின் அருள் பெறுகிறார்கள். சித்த புருஷர்களின் சமாதியைத் தேடிச் செல்லும் அரும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தது - சதுரகிரிதான். அந்தப் புண்ணிய பிரதேசத்தைத் தரிசித்த பிறகுதான் பல சமாதிகளைத் தரிசிக்கும் எண்ணமும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டன.
மகான்களின் பரிபூரண ஆசிர்வாதம், இந்த பூமியில் வசிக்கும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல காஞ்சி மகா ஸ்வாமிகளின் திருப்பாதம் பணிகிறேன்.
அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.
Release date
Ebook: 11 January 2021
English
India