Step into an infinite world of stories
Non-Fiction
கல்கி வார இதழில் நான் எழுதிய கட்டுரைகளே இத்தரிசனம் நூல்! ஆன்மீகக் கருத்துக்களுடன், நிகழ்கால நடப்பை வைத்து சுதந்திரமாக நான் எழுதிய கட்டுரைகள் இவை.
கல்கியில் இரண்டு பக்கங்களுக்குள் இந்த கட்டுரைகள் இருக்க வேண்டும் என்கிற பக்கக் கட்டுப்பாடு காரணமாக, நிறைய சிந்தித்து விபரமாக எழுத இடம் இருந்தும் நான் கட்டுரையை எழுத இயலவில்லை. அதேசமயம் ஊடகத்துக்குள் சுருக்கமாக சொல்வது என்கிற ஒரு புதுவித முனைவுக்கு நான் பயிற்சி எடுத்தது போலவும் எனக்கு இத்தொடர் அமைந்தது.
சில கட்டுரைகள் வெகு அழகாய் வசப்பட்டன. சில இன்னமும் எழுதலாமே என்றன... மொத்தத்தில் எனக்கு நல்ல அனுபவம். அதே வேளையில் மனம் திறந்து பல சமூக அவலங்களை என்னால் சுட்டிக்காட்டி எழுத முடிந்தது.
அன்புடன்
இந்திரா சௌந்தர்ராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India