Step into an infinite world of stories
Thrillers
பேய்கள், ஆவிகள், பூதங்கள் பற்றி ரிக் வேதத்திலும், சுமேரிய புராணக் கதைகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. மஹாபாரதத்தில் பேயின் கேள்விகள் எனப்படும் ‘ரக்ஷப் ப்ரச்னம்’ பகுதி மிகவும் அருமையான பகுதி. சங்க இலக்கியத்தில் பேய்கள், பேய்களை விரட்டும் வெண்கடுகு முதலிய செய்திகள் வருகின்றன. கலிங்கத்துப் பரணி போன்ற பரணி இலக்கியங்களில் பேய்கள் பற்றிப் பாடுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அவ்வையார் திரைப்படத்தில் வரும் பேய்க் காட்சிகள் எல்லோரையும் அஞ்ச வைத்த காலமும் உண்டு. அதே போல ஆங்கிலத்தில் 13 GHOSTS போன்ற படங்களைச் சொல்லலாம். வெளிநாட்டில் பேய்க்கதைகளை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உண்டு.
வெளிநாட்டில் பேய்க்கதைகளை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உண்டு. சுவாமி விவேகானந்தர், தனது சீடர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தது ‘சம்பாஷணைகள்’ என்ற ராமகிருஷ்ண மடத்தின் நூலில் உள்ளது. அவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஆவிகளை எப்படிப் பிரார்த்தனையின் வாயிலாக கரை ஏற்றினாரென்றும் கூறப்பட்டுள்ளது.
மேலைநாடுகளில் தீபாவளி நேரத்தில் வரும் ஹாலோவீன் பண்டிகை பேய்களுக்காவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க ஐம்புலன்களை வென்ற ஆன்மீக வாதிகளும் கவிஞர்களும் 'பயம்'தான் பேய் என்கின்றனர். எது எப்படியாகிலும் தீயதைப் பற்றி அச்சம் இருப்பது நல்லதே.
Release date
Ebook: 19 December 2022
English
India