Step into an infinite world of stories
Classics
தமிழ் ஒரு கடல் என்பதை, என்னுடைய நூல்களை வாசிப்போர் நன்கு அறிவார்கள். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்னும் 18 சங்க நூல்களில் உள்ள சுமார் 30,000 வரிகளையும் பல ஆண்டுகளுக்கு ஊன்றிப் படித்து அவற்றின் சுவையை ரசித்ததாலும், ருசித்ததாலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் 11 ஆண்டுகளாக எழுதி வந்தேன். அவற்றை நூலாக வெளியிட பலரும் வேண்டியதால் இன்னும் ஒரு நூலைத் தொகுத்தேன். இவை பல ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் சில விஷயங்களை மட்டும் நீங்கள் ஒரு முறைக்கும் மேலாக படிக்க நேரிடலாம்.
நூலின் தலைப்பு முழு விஷயங்களையும் உங்களுக்குத் தராமல் போகலாம். ஆகையால் சிறிய குறிப்பு - இந்த நூலில் தமிழின் விரிவு காட்டப்படுவதோடு தமிழர்கள் இழந்த நாடுகள், பாண்டிய மன்னன் 1000 பொற்கொல்லர்களைத் தீக்கிரையாக்கியது, வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள், எலி மயிரில் தமிழன் ஆடை நெய்தது, தமிழ்ப் பெண்களின் தழை உடை, அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார், புற நானூற்றில் உள்ள யாகம் பற்றிய விஷயங்கள், தமிழர்கள் மீது பிஷப் கால்டு வெல்லும், ஈ.வெ.ரா.வும் பாடிய வசைமாரி முதலிய விஷயங்களும் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளன.
Release date
Ebook: 19 December 2022
English
India