Step into an infinite world of stories
Fiction
நகரின் மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் சாந்தாமணி, தன்னிடம் பிரசவத்திற்காக வரும் பெண்களில் பலருக்கு, சுகப் பிரசவம் ஆக விடாமல், வேண்டுமென்றே சிசேரியன் செய்து அதிகப் பணம் பறிக்கிறார். ஏழைகளையும் கசக்கிப் பிழிகிறார்.
மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றங்கரையில், தனது மகளின் பிரசவ செலவிற்கு பணமில்லாத காரணத்தால் வீராச்சாமி என்பவன், “ஆளிழுக்கும் வேலை”யைச் செய்கிறான்.
“ஆளிழுக்கும் வேலை” என்றால் ஆற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளில் ஒருவரை, நீருக்கடியில் மறைந்து வந்து, அவர்களது காலைப் பிடித்து இழுத்து, ஆழத்தில் கொண்டு சென்று, ஒரு பாறையில் செருகி வைத்து விட்டு வருவது. பின்னர் அதே பிணத்தை எடுக்க அந்த அப்பாவியின் குடும்பத்தாரின் பேரம் பேசி பணம் பறிப்பது.
வீராச்சாமியின் அன்றைய தினப்பலியாக டாக்டர் சாந்தாமணியின் மகன் பிரவீன் சிக்குகிறான்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்னும் கருத்தினை உறுதிப்படுத்தும் அருமையான கதை.
Release date
Ebook: 18 May 2020
English
India