Step into an infinite world of stories
Short stories
மலர்களில் எந்த மலர் உயர்ந்தது ? எல்லா மலர்களுக்கும் தனி தனித் தன்மைகள் உண்டு. அதனதன் வகைகளில் அவைகள் சிறந்தவைகளே. வாகை சூடி வந்த மலர் ஒன்று. வாடிய மலர் மற்றொன்று. தும்பை மலரும் உண்டு. துளஸியும் உண்டு. இவைகளைப் போல் தான் பெண்களும். இவர்கள் நான் கண்டு உணர்ந்த மலர்கள். மனத்தால் உயர்ந்த மலர்கள்.
நம் எண்ண நந்தவனத்தில் நந்தியாவட்டைகளும் உண்டு இவைகளை பூஜைக்காகவும் பயன் படுத்தலாம் மருந்தாகவும் உபயோகப் படுத்தலாம்.
குயில்கள் பாடும் சோலையில் மயில்களின் நர்த்தனங்களும் உள்ளன. கேட்டும், பார்த்தும் பரவசப்படலாம். ஆனால் மாற்றிப் பார்த்தால் அர்த்தமே மாறிவிடும்.
மனைவி டெலிவரிக்குப் போயிருப்பதும் தபால்காரர் டெலிவரிக்குப் போயிருப்பதும் ஒன்றல்ல. சிறந்தவைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடு என்றார் பகவான் கீதையில்.
பறவைகளில் கருடனாகவும், மரங்களில் அரசாகவும், வேதங்களில் சாம வேதமாகவும் ஆச்சார்யர்களில் சுக்கிராச்சார்யராகவும் , எழுத்துக்களில் “ ஓம்” காரமாகவும் அந்த எம்பிரான் சர்வ வியாபியாக இருப்பது போல் நல்ல எண்ண விதைகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல விளைச்சல் காணலாம்.
Release date
Ebook: 12 August 2021
English
India