Step into an infinite world of stories
Language
உலகப் புகழ் பெற்ற கவிஞனும், நாடகாசிரியனுமான காளிதாசன் ஒரு உவமை மன்னன். அவனது ஏழு படைப்புகளில் 1500 உவமைகள், உருவகங்கள் முதலியன உள்ளன. அவற்றில் 200 உவமைகள் சங்கத் தமிழ் நூல்களிலும், அதே காலத்தில் எழுந்தவை என்று கூறப்படும் பிறநூல்களிலும் கிடைக்கின்றன. அவை அனைத்தும் வட நாட்டிலுள்ள ஆறு, மலை, முனிவர்கள், பெரியோர்கள் பற்றிப் பேசுகின்றன. ஆகவே தமிழர்கள் அவற்றை காளிதாசனிடமே எடுத்திருக்க வேண்டும் இதன் அடிப்படையில் நான் காளிதாசனை கி.மு.வில் அல்லது அதற்கும் முன்னதான காலத்தில் வைத்துள்ளேன். காளிதாசன் எழுதிய குமார சமபவத்தில் முதல் பத்துப் பாடல்களில் வந்த இயற்கை வருணனை புற நானூறு முதலிய நூல்களில் அப்படியே வருகின்றன.
சங்க இலக்கிய உவமைகளை அறியாத பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞர்களும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்து அதற்கான காரணங்களை 100 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நான் சங்க இலக்கியமும் அதை ஆதரிக்கின்றன என்று காட்டுவதற்கு, பல தலைப்புகளில் ஏராளமான சங்க காலச் செய்யுட்களை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். குறிஞ்சிப் பாட்டினைப் படித்த ஜி.யு.போப், உடனே அது காளிதாசனைப் பார்த்து எழுதியது என்று விமர்சித்துள்ளார். இரு மொழிகளையும் அறிந்த அறிஞர்களுக்கு இது நன்கு புலப்படும். எனது கருத்தினை ஏற்காதவர்களும் கூட, காளிதாச மஹாகவியின் உவமை நயங்களை அறிய இந்த நூல் உதவும் என்று எண்ணுகிறேன்.
Release date
Ebook: 19 December 2022
Tags
English
India