Step into an infinite world of stories
Thrillers
அந்தப் பள்ளியின் நட்சத்திர கிரிக்கெட் வீரன் அர்ஜுன். ஏராளமான ரசிகர்..ரசிகைகள் உண்டு. அதே பள்ளியில் புதிதாய் வந்து சேரும் கௌதமும் ஒரு கிரிக்கெட் வீரன். ஆனால், இந்தப் பள்ளியில் அர்ஜுனை மீறி அவனால் ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் அர்ஜுனின் தாய் லீலாவதிக்கும் கௌதமின் தாய்க்கும் இடையில் ஒரு சவால் எழுகின்றது. ஆண்டு விழா போட்டியில், இருவரும் தங்கள் மகன்தான் சாதிக்கப் போகிறான் என்று வாக்குவாதம் செய்கின்றனர். அந்த சவாலில் ஜெயிப்பதற்காக, கௌதமின் தாய் சந்திரா புகழ் பெற்ற கோச்சர் ஒருவரை நியமித்து தன் மகனுக்கு பயிற்சியளிக்கின்றாள். ஆனாலும் கௌதமால் சாதிக்க முடியவில்லை. அர்ஜுனே முன்னிலையின் நிற்கின்றான். கடைசியில் சந்திரா, ஒரு மந்திரவாதி மூலமாய் தன் மகன் கௌதமின் உடம்பிற்குள் இறந்து போன ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரனின் ஆவியை நுழைக்கிறாள்.
அதன் விளைவாய் கௌதம் சாதிக்கிறான். சவாலின் ஜெயித்த பின் தன் மகன் உடம்பிலிருந்து ஆவியைப் பிரித்தெடுக்க சந்திரா மந்திரவாதியை நாடிப் போகும் போது, அவர் இறந்து போன விஷயம் தெரிய வர, நொந்து போகிறாள். ஆவி கௌதமின் உடம்பிற்குள் இருந்து கொண்டு பல விபரீதங்களைப் புரிகின்றது.
அவள் தன் மகன் உடம்பிலிருந்து ஆவியை பிரித்தெடுத்தாளா?....
Release date
Ebook: 17 May 2021
English
India