Step into an infinite world of stories
Non-Fiction
ஹைதராபாத்திலுள்ள ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஸாப்ட்வேர் எஞ்சினீயர் பதவிக்கான இண்டர்வியூ கடிதம் வர, ஈரோட்டிலிருந்து கோவையை நோக்கி பஸ்ஸில் புறப்படுகிறான் உதயகுமார். இடையில் பஸ் பிரேக் டவுன் ஆகி விட அவனால் கோவையிலிருந்து ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க முடியாமல் போகும் நிலை உருவாகின்றது.
அந்த ஆத்திரத்தில் நடு ரோட்டில் அமர்ந்து, மற்ற பயணிகளின் உதவியுடன் சாலை மறியல் செய்கிறான். அதன் காரணமாய் வேறொரு பஸ் வந்து அவர்களை அழைத்து செல்ல, தன்னால் அந்த ரயிலைப் பிடிக்க முடியாது என்பது உறுதியாகி விட்ட நிலையில், சோகமாய் அதே இடத்தில் அமர்கிறான். அவனை காரிலிருந்தவாறே கண் காணித்துக் கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் இந்திரசேனன் அழைத்து, தனது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாயா? எனக் கேட்க, ஒப்புக் கொள்கிறான்.
ஹைதரபாத்தில் தொடர வேண்டிய அவன் வாழ்க்கை சென்னையில் தொடர்கிறது. உதயகுமார்...உதயகாந்த் ஆகிறான். முதல் படமே வெற்றி வாகை சூட வாய்ப்புக்கள் குவியத் தொடங்குகின்றது. வின்னிங் ஸ்டார் பட்டம் பெற்றவனை திரையுலகில் சில மாய பிம்பங்கள் தடுமாறச் செய்ய, தடம் மாறுகிறான்.
அடுத்து நிகழ்ந்தது என்ன?...வாசியுங்கள் நாவலை.
Release date
Ebook: 17 May 2021
English
India