Step into an infinite world of stories
Religion & Spirituality
‘முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்!’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு 'பிளாக்'குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும். ஆங்கிலத்தில் இந்துமதம் பற்றியும் வேதங்களைப் பற்றியும் ஆயிரக்கணக்கான புதிய நூல்கள் உள்ளன. தமிழ் மொழியில் அத்தகைய நூல்கள் குறைவு. என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு . கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன் . என்னுடைய கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.
ஆங்கில நூலாசிரியர்கள் சொன்னதையே மொழி பெயர்க்காமல் ஆங்காங்கே தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒப்புவமைகளும் இருக்கும் . இந்து மதத்தின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் நம்முடைய மதத்தின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
Release date
Ebook: 20 July 2022
English
India