Step into an infinite world of stories
Short stories
என்னுடைய 9-வது சிறுகதைத் தொகுப்பான “மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள்” தொகுப்பில், குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, என்று பல்வேறு வகைக் கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் “மெதுவாகச் செல்லும் ஆம்புலன்ஸுகள்” என்னும் சமூகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமீபத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு சோகமான... கோரமான ரயில் விபத்தை மையப்படுத்தி, அதன் காரணமாய் வெளிப்படும் மனித நேயத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நன்னெறியை எடுத்துரைத்துள்ளேன். “உடன்பட்டுக் கடன் பட்டு” கதையில் ஒரு குடும்பத்தலைவனின் கையறு நிலையையும், அவன் தன் குடும்பத்திற்காக ஏற்றுக் கொள்ளும் வேதனைகளையும் விவரித்துள்ளேன்.
ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத்தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் இன்னொரு பரிமாணத்தை, “சூப்பையன்” என்னும் கதை மூலமாகவும், ஊதிய உயர்வுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவே தன் மேனேஜருக்கு அவல ஊழியங்களைச் செய்யும் பணியாளரின் நிலையை “வெங்கி விஜயம்” என்னும் கதையின் வாயிலாக கூறியுள்ளேன்.
நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.
Release date
Ebook: 5 March 2024
English
India