Step into an infinite world of stories
Religion & Spirituality
தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம். தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது. அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார், கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.
மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.
கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
Release date
Ebook: 27 June 2022
English
India