Step into an infinite world of stories
Fiction
இந்தச் சிறுகதை (!) தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரும்படி யாரைக் கேட்கலாம் ஏன்று யோசித்தேன். யாரயும் கேட்க பயமாயிருந்தது. ‘என்னை இண்ஸல்ட் பண்ணுகிறாயா?' என்று சீறுவார்கள் என்ற பயம். கடைசியில் இந்தக் கதைகளின் தனித் தன்மையை ரசித்துப் பாராட்டக் கூடியவர் ஒரே ஒருவர்தான் இருக்கிறார் என்று உணர்ந்தேன். அது நான் தான் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து "ஸாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்" என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. வழ வழப்பான காகிதத்தில் ஒரு தொடர்கதை, இரண்டு சிறுகதைகள், நிறைய கட்டுரைகள் கொண்டதாக, பளபளப்பான வண்ண அட்டை போட்ட இந்தப் பத்திரிகையில், புதுமையான சிறுகதை ஒன்று அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஒரு யந்திர உற்பத்தி கம்பெனி. தன் விற்பனைப் பிரதிநிதியாக ஓர் இளைஞரை ஊர் ய்ய்ராக அனுப்பும். அவர் அங்கே கிடைத்த சிக்கலான அனுபாவங்களைத் தலைமை அலுவலகத்துக்கு எழுதி அனுப்புவார், சிக்கலை சமாளிப்பது எப்படி என்று அவர்கள் சொல்வார்கள். அதன்படி அவர் செய்வார். கதை மொத்தமும் கடிதங்களிலேயே நகரும். எல்லாமே வேடிக்கையான கதைகள், தான்.
அமரர் எஸ்.ஏ.பி. ‘இது போல நீங்கள் ஒரு கதை எழுதுங்கள்' என்று பணித்தார். காதலையும் ஹாஸ்யத்தையும் மையமாக வைத்து நான் எழுதலானேன். யாருக்கு யார், எந்த முகவரியிலிருந்து எந்த முகவரிக்கு எழுதுகிறார்கள் என்று முதல் சில கதைகளில் விவரம் (கற்பனையாகத்தான்) தந்தேன், பிறகு வேடிக்கைதான் முக்கியமே தவிர, விவரம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரே ஊருக்குள், ஒரே பேட்டைக்குள், ஒரே தெருவுக்குள், ஏன் ஒரே வீட்டுக்குள் கூட இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்த்தன, எந்த லாஜிக்கும் இல்லாத கன்னா பின்னா கதைகள் இவை. ஆசிரியர் எஸ்.ஏ.பி. க்கு இந்தக் கோமாளித்தனம் பிடித்திருந்தது. ‘இந்த வாரம் நீங்கள் ஒரு கடிதக் கதை எழுதுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார், அவைகளைப் பார்க்கவும் மாட்டார். படிக்கவும் மாட்டார். அச்சில் ஏறி விடும்.
பெருமகனாரான அந்தத் திருமகனாரின் காலடிகளில் இந்தத் தொகுப்பையும் மற்றத் தொகுப்புக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் வைக்கிறேன்.
Release date
Ebook: 23 December 2019
English
India