Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
புழுதி எழும்பும் வீதி மணல்களில் அவள் காலடியைத் தேடுகிறேன். வானவீதியில் மேக ரதங்களில் நாம் ஊர்வலம் போவோம் வா. அந்தி சூரியன் போல் பிரகாசிக்கிறது உன் சிவப்புக்கல் மூக்குத்தி. என் உள்ளக்கடலில் உன்னைப் பற்றிய எண்ணங்கள் அலையலையாய் எழும்புகிறது. பரிசுத்தமானதெதுவும் இந்தப் பூமிக்கு அப்பாற்பட்டது என உன்னைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். உனது பார்வையால் எனது பாவங்கள் கழுவப்படுகின்றன. வானமெங்கும் உன் பிம்பத்தைத் தான் பார்க்கிறேன். கனவுச்சிறையிலிருந்து விடுதலையளிக்க நீ வருவாயா? உன் நினைவு சிலுவையென கனக்கிறது. சிலைகளை உயிர்ப்பிக்கும் உனதழகு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. துயரம் நிறைந்த இந்தப்பூமிப் பந்தைவிட்டு நாம் வானமண்டலத்தில் பறந்துவிடுவோம் கனவுப்பறவையாக…
ப்ரியமுடன், ப. மதியழகன்
Release date
Ebook: 3 January 2020
English
India