Step into an infinite world of stories
Fiction
"தெய்வத்தைக் கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸத்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு.”
நம் சமயத்துக்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தைப் படித்துக் கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தின் அனுமதி கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம், எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பி விட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம்.
ஆனால், சிரிப்பது தெய்வமுமில்லை கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம் தான். அதுவும் அவனவன் எண்ணமே -"
Release date
Ebook: 5 February 2020
English
India