Step into an infinite world of stories
Romance
உயிருக்குயிரான காதலன் வெளிநாட்டில் இறந்துவிட்டான் என்ற செய்தி இடியாய் இறங்கிய பின்பு அவன் நினைவுகளில் வாழும் காதலி எப்படி வாழ்கிறாள். அவள் அவன் நினைவுகளை மறந்து விட்டு புது வாழ்க்கையை துவங்கி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள மாட்டாளா என ஏங்கும் பெற்றோர்கள். சிறுவயதில் முதல் அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முறைமாமன் கீரிப்பாறை ஜோஸ் காத்திருக்கிறான். ஆனால் அவளோ வேறொருவனை விரும்பிய காரணத்திற்காக தன் மனதில் இருந்த எண்ணங்களை விலக்கி காதலர்கள் வாழ்க என்று வாழ்த்துக் கூறிய பின் அவள் காதலன் இறந்த செய்தி கேட்டு பரிதாபப்படுகிறான். பெற்றோரும் தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது சம்மதம் தெரிவித்த அந்தப் பெண் திருமண நாளன்று வெளிநாட்டில் வேலை பார்த்த காதலன் உயிரோடு திரும்பி வந்து நின்றால் எப்படி இருக்கும். அவள் காதலனை கரம் பிடித்தாளா? தாய்மாமனை மணமுடித்தாளா? என்பதை சொல்லும் காதல் காவியம்தான் காத்திருந்து காத்திருந்து வாசியுங்கள் வசமாகி விடுவீர்கள்.
Release date
Ebook: 1 June 2022
English
India