Step into an infinite world of stories
Religion & Spirituality
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் பிறந்த சிறுவனைப் பலருக்குத் தெரியாது. ஆனால், சத்திய சாயிபாபா என்ற திருநாமத்தில் பலருக்கும் பகவானாகவே தோன்றும் மகானை இன்று உலகெங்கும் உள்ள மக்களுக்குத் தெரியும். பகவான் பாபாவைப் பற்றிப் பல பெரியோர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பலமொழிகளிலும் புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
இது பகவான் பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு மலர்.
பாபா அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் வசிக்கிறார். அங்கே உள்ள பிரசாந்தி நிலையம் அவரது இல்லம். அதை ஒட்டித் தொண்டர்கள் இருக்கும் இடங்களும், பிரார்த்தனை மண்டபமும் இருக்கின்றன. ஆண்டின் பெரும் பகுதியில் பாபாவை இங்கே தரிசிக்கலாம். வேனிற் காலத்தில் பாபா பெங்களூரை ஒட்டிய ஒயிட் பீல்டுக்கு வருகிறார். அங்கேயும் பிரார்த்தனை, வேனில் முகாம் எல்லாம் உண்டு.
நாடெங்கும் ஆயிரக்கணக்கான சத்ய சாயி சமிதிகள் உள்ளன. இவை எளிய மக்களுக்குச் சேவை செய்கின்றன. அவர் நிறுவியுள்ள கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இளைய தலைமுறையினருக்கு ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கல்வி போதனையை அளிக்கின்றன. இத்தகைய ஒரு பண்பாட்டுக் கல்லூரியே பிரசாந்தி நிலையத்தில் அமைந்திருக்கிறது.
சமூக சேவைக் கூடங்கள், மருத்துவ முகாம்கள். ஏழை எளியவர்க்கு உணவளித்தல், வேனிற்காலத்தில் இளைஞர்களுக்கு ஒழுக்கப்பயிற்சி, கலை உணர்வை வளர்க்கும் இலவச நாடக நிகழ்ச்சிகள், இப்படி பகவான் பாபா நல்ல வாழ்க் கையை ஒட்டிய நலம் தரும் ஆத்ம போதனையை நமக்கு அளிக்கிறார். அவற்றால் பலன் பெற்றவர்கள் கோடிக் கணக்கானவர்கள்.
அவரிடம் உடல் நலமில்லாமல், உள்ளச்சோர்வுடன், உதவியை நாடிவரும் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள், பாபா அவர்களைத் தேர்ந்தெடுத்து ஆறுதல் கூறுகிறார். பிரசாதமும் அளித்து வழிகாட்டுகிறார். மனம் திருந்தி வாழக் கற்றுக் கொடுக்கிறார். “உன்னைக் கண்ட பிறகு நான் உனது உள்மனத்தை ஆராய்வதில்லை. உன்னைப்பார்த்த பிறகு நான் உன்னுடைய கடந்தகால, வருங்காலப்பண்புகளை எடுத்துரைப்பதும் இல்லை.... எப்பொழுதும் நான் உன்னுடன் இருக்கிறேன்...
இதுவே பகவான் பாபா கூறியிருக்கும் தத்துவம்.
பக்தர்களின் மனப்பாங்கிற்கு ஏற்றபடி, ராம்னாகவும் கிருஷ்ணனாகவும், சக்தி ரூபமாகவும் காட்சி தருகிறார் வெவ்வேறு மதத்தினர் அவரவர் விரும்பித்தொழும் வகையில் தரிசனம் அளிக்கிறார் அவருடைய பிரசாந்தி நிலைய வாயிற் தூண்களில், பிரார்த்தனை மண்டபத்தில் எல்லா மதத்தினருக்கும் இடம் உண்டு. அவருடைய கீர்த்தனைகளில் எல்லோருக்கும் பொதுவான நாமாவளிகள் உண்டு. ஒரே குடும்பம் என்பது அவர் அருள்வாக்கு.
இன்று ஆத்ம சிந்தனையும், நல்லொழுக்கங்களை ஒட்டிய வாழ்வும், எளியவர்களுக்குத் தொண்டுசெய்யும் மனப்பான்மையும், பலரிடையே இல்லை. இதை மாற்றி அமைக்கவே. நான் உங்களிடையே வந்திருக்கின்றேன். இன்னும் நாற்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்க இன்றைய இளைய தலைமுறையினரைத் தயார்செய்து உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள்'' என்கிறார் பாபா.
பகவான் பாபா நிகழ்த்திய அற்புத லீலைகளின் மூலமாக அவருடைய இந்த உயரிய நோக்கத்தை எளிய நடையில் எடுத்துச் சொல்லி, மக்கள் பெரும்பாலான அளவில் அவருடைய நல்வழியில் நடக்கச் செய்வதே இந்த நூலின் நோக்கம்.
பகவான் பாபாவின் பாத கமலங்களில் என்னுடைய எளிய சமர்ப்பணமாக இதை வைக்கிறேன்.
அந்த அருட்பிரவாகத்தை நான் கங்கை நீரைச் செம்பில் கொண்டு வருவதைப்போல, இந்தச் சிறு புத்தகத்தில் காட்ட முயன்றிருக்கிறேன்.
இதை உருவாக்க உதவிய, பகவான் பாபாவின் அருள் கனியும் உள்ளங்கள் யாவுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி
Release date
Ebook: 5 February 2020
English
India