Step into an infinite world of stories
Fiction
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நான் 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' இதழ் தவறாமல் வாங்கிக் கொண்டிருந்தேன். பைண்ட் செய்து பாதுகாத்து வந்த அந்த இதழ்களை ஒரு நாள் பார்த்தபோது, நல்ல சில துணுக்குகள் இருப்பதை ஏன் தமிழில் தரக் கூடாதென்று தோன்றியது. 'குங்குமம்' இதழுக்கு மொழி பெயர்த்து அனுப்ப, அவை பிரசுரமானதோடு, வாரா வாரம் தரலாமே என்று ஆர்வமாகக் கேட்டார்கள்.
'சும்மா கொஞ்ச நேரம்' என்ற தலைப்பில் துணுக்குகள் தயாரித்தேன். நூல் நிலையத்திற்குப் போய், பழைய தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி, வாழ்க்கை வரலாறு, கவிதை, நாட்டுப் பாடல், மருத்துவம் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன். கல்கத்தாவில் இருந்த சில நண்பர்கள் அங்கிருந்து ஆங்கிலப் பத்திரிகைகளை அனுப்பினார்கள். ஏறத்தாழ இரண்டு வருட காலம் வெளியான அந்தத் துணுக்குகள்தான் 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' என்ற தலைப்பில் இங்கே வந்துள்ளது.
இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆனால், ரா.கி. ரங்கராஜன் தொகுத்த 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' புத்தகத்தில் இந்த விஷயம் காணப்படுகிறது என்ற தகவலையும் அவர்கள் சொன்னால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
- ரா. கி. ரங்கராஜன்
Release date
Ebook: 18 December 2019
English
India