Step into an infinite world of stories
Fiction
தாயில்லா சிறுவன் சரவணன். அவன் தந்தை குமரேசன் இரண்டாம் தரமாக சுமதியை மணந்து கொள்கிறார். தாயின் மறைவிற்குப் பின் ஒவ்வொரு இரவும் அவள் சேலையை கட்டிப்பிடித்துக் கொண்டு தாயின் வாசனையை நுகர்ந்தவாறே தூங்குவது சரவணன் வழக்கம். சுமதி வேண்டுமென்று மூத்த தாரத்தின் சேலைகள் மொத்தத்தையும் ஒரு குடுகுடுப்பைக்காரனுக்கு கொடுத்து விடுகிறாள். சாதாரண மனிதர்களை விட அதிக நுகரும் சக்தியும், ஒருவிதமான மோப்ப திறனும் கொண்ட சரவணன் தன் தாயின் சேலை வாசனையைப் பின்பற்றி சுடுகாட்டிற்கு, அந்தக் குடுகுடுப்பைக்காரனைத் தேடிச் செல்கிறான்.
அங்கே தன் தாயைப் புதைத்த இடத்தில் இருந்த மேட்டின் மீது தாயின் வாசனை வர அதன் மீது படுத்து உறங்கியும் விடுகிறான். படுத்திருக்கும் சிறுவனை எழுப்பி விசாரித்த குடுகுடுப்பைக்காரன் சரவணனின் கதையைக் கேட்டு அவன் மீது இரக்கப்பட்டு அவனைத் தன் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே சரவணன் தன் அதீத சக்தியால் பல அற்புதங்களை நிகழ்த்துகிறான். இதனிடையில் அந்தக் குடுகுடுப்பைக்காரனிடம் இருக்கும் நல்ல குட்டிச்சாத்தானை அபகரிக்க ஒரு மந்திரவாதி குடுகுடுப்பைக்காரனின் ஊருக்கு வருகிறான். அவனை சரவணன் தன் அதீத சக்தியால் நுகர்ந்து குடுப்பைக்காரனுக்கு அடையாளம் காட்டுகிறான். மீதி கதையை நாவலை வாசித்து அறிவோமே?
Release date
Ebook: 5 March 2024
English
India