Step into an infinite world of stories
Fantasy & SciFi
கான்ஃப்ரன்ஸ் அறையில் நுழைந்தார் ராஜன். ஏற்கனவே ஞானசேகரும் - கண்ணப்பனும் காத்திருந்தார்கள். ஒரு சில முக்கிய அதிகாரிகள் தவிர அவர்களது ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், ஆடிட்டர், கம்பெனி லாயர் என சகல பேரும் காத்திருந்தார்கள். ஒரு வீடியோ காணொலிக்காக சகல நவீன ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தன. ராஜன் பிரமித்தார். தனக்கு மட்டுமே தர வேண்டிய ஒரு விளக்கம். எதற்கு இத்தனை முன்னேற்பாடுகள். உள்ளே நுழைந்தாள் ரேகா. கூடவே பிரபலமான மீடியா ஆட்கள் காமிரா சகிதம். ஞானசேகர், கண்ணப்பன் டென்ஷனாகிவிட்டார்கள். “சேர்மன் சார்! இது முழுக்க முழுக்க நம் கம்பெனியோட உள்விவகாரம். நாங்க கேட்ட சில கேள்விகளுக்கு ரேகா பதில் தரணும்னு நீங்க விரும்பினீங்க. அவகாசம் குடுத்தீங்க. எதுக்கு பிஸினஸ் ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், மீடியா எல்லாம்?” ராஜனுக்கும் புரியலீங்க. கேட்டே விட்டார், மகளிடம். “அப்பா நமது உலகளாவிய வர்த்தகம். இதுல போட்டியாளர்களும் அதிகம். இதை அடுத்த கட்டத்துக்கு நாம கொண்டு போகனும்னா, உள்ளே மட்டுமே பேசி லாபமில்லை. வெளிய தெரியனும். அப்பத்தான் உலகத்தோட பார்வை நம்ம பக்கம் திரும்பும். என்னை அனுமதிங்க.” “சரிம்மா.மீடியா காமிராக்களுடன் காத்திருக்க, அறை இருட்டாக்கப்பட, திரையின் வெளிச்சம். சீனியர்கள் இதுவரை சாதித்தது, அவர்களது பல வருட அனுபவம், ஏஜெண்டுகள், ரெகுலர் சப்ளையர்ஸ் லாப நஷ்ட கணக்குகள், கம்பெனியை உயர்த்த அவர்கள் எடுத்த முடிவுகள் என சகலமும் விவாதிக்கப்பட்டது. திரையில தோன்றி சகலத்தையும் ரேகாவே சொன்னாள். அவர்களது கேள்விகள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், ரேகா தரும் பதில்கள், அதற்கு பக்கபலமான டாக்குமென்ட்ஸ், ஆதாரங்கள், ஒப்பிட்டு பார்க்கும்போது, ரேகா அதை உடைத்து கம்பெனியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எடுக்கும் முயற்சிகள். இதுபோல 37 கேள்விகளுக்கும் தெளிவான பதில்-விளக்கம், முன்னேற்றம், லாபக் கணக்கு. பழைய ஒப்பந்தங்கள் பதினாறு ரத்து. பதிலாக புதிய ஒப்பந்தங்கள் இருபத்தி ஏழு உருவான விதம். உலக மார்க்கெட். அவர்களோடு இணைய போகும் முயற்சி. முடிச்சவுடன் விளக்கு எரிய கைதட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது. கண்ணப்பர் எழுந்தார். “நாங்க பேசனும். இது ஒரு மாதிரி மீடியாவை வச்சிட்டு நடத்தற ஆடம்பர மீட்டிங். கொஞ்சம் உள்ளே போய் பார்க்கனும். விளக்கம் சொல்லணும்.” ரேகா எழுந்தாள். “சார் யார் யாருக்கு விளக்கம் தரணும்?” “நீங்க எங்களுக்கு!”ஹலோ நீங்க ரெண்டு பேரும் கம்பெனில பார்ட்னரா, ஷேர்வோல்டறா? டைரக்டர்களா, எது? சேர்மன்கிட்ட சம்பளம் வாங்கற சீனியர் அதிகாரிகள். உழைச்ச உழைப்புக்கு தாராளமா எல்லாம் கிடைச்சிருக்கு. அதனால் முதலாளியை கேள்வி கேட்கற தகுதி இல்லை. உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனா, கம்பெனியோட நோக்கம், வளர்ச்சி, அதோட நவீன பாதையை மீடியாவுக்குத் தெரிவிக்கத்தான் இந்த கான்பரன்ஸ். உங்களுக்கு விளக்கம் தர அல்ல.” அவர்கள் ஆடிப் போக, “உங்க உழைப்பை மதிக்கிறோம். ஆனா, அதே பழைய ஸ்டைல்ல நடந்தா, பின் தங்குவோம். அதை நவீனமாக்கத்தான் பலவித மாற்றங்கள். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப முடிய கம்பல்சரி ரிடையர்மென்ட்! உங்க செட்டில்மென்ட் செக் ‘ரெடி’ சார்! உங்க கையாலே குடுத்து அவங்களை கௌரவமா அனுப்பி வைங்க!” ராஜனே ஆடிப் போனார். “டு வாட் ஐ ஸே சார்!” அவள் குரலில் அதட்டலும் அதிகாரமும் இருந்தது. ஞானசேகர் எழுந்தார். “அப்படியெல்லாம் எங்களை வெளிய அனுப்ப முடியாது” “யார் சொன்னது? லாயரை கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்க கோர்ட்டுக்கு போகலாம். சந்திக்க நான் தயாரா இருக்கேன், நீங்க பிரச்சனை பண்ணினா, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக்கூட கோர்ட்லதான் வாங்கிக்க முடியும்!” “சார் என்ன இது?” “அப்புறமா உங்களுக்கு இன்கம்டாக்ஸ் பிராபளம் வரும். அப்பாகிட்ட நீங்க எல்லாத்தையும் ஒயிட்ல வாங்கலை ப்ளாக் இருக்கு! அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்!” இருவரும் மிரண்டார்கள்
© 2024 Pocket Books (Ebook): 6610000511075
Release date
Ebook: 16 January 2024
English
India