Step into an infinite world of stories
Fantasy & SciFi
சந்திரா சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகிவிட்டாள். “சீக்கிரம் போகணுமாடி?” “ஆமாம்மா! நிறைய வேலை இருக்கு. போற வழியில கோவில்ல சாமி கும்பிட்டுட்டு, அப்படியே ‘ஆபீசு’க்குப் போயிடுவேன்.” சந்திராவுக்கு பக்தி அதிகம். அந்தக் குடும்பத்தில் எல்லாருக்குமே இறை நம்பிக்கை உண்டு. காண்டீபன், சாவித்திரி இரண்டு பேருக்கும் வழிபாட்டு ஆர்வம் அதிகம். அதனால்தான் பெண்களுக்கும்... ரத்தத்தில் ஊறிய சங்கதி. “சாப்பிட்டு போடி.” “இல்லேம்மா... நேரமில்ல. ‘ஆபீஸ் கேன்டீன்’ல பார்த்துக்கிறேன்.” சந்திரா ‘டூ வீலரில்’ தான் போவாள். “சந்திரா! நானும் புறப்பட்டாச்சு. ‘கம்பெனி கார்’ வரும். உன்னை ‘டிராப் பண்ணிடட்டா?” - அப்பா கேட்க, “இல்லப்பா! உங்க கம்பெனி வண்டியெல்லாம் எனக்கு சரிப்படாது. நான் என்னை மட்டுமே நம்புறவ. புரியதா...?” “ஆம்பளை மாதிரி பேசுவா.” “அம்மா! உனக்கு பையன் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவ நான்தான்.” “சந்திரா... எங்க ‘கம்பெனி’யில ஒரு நல்ல வேலை வருது. நீ ‘அப்ளை’ பண்ணுறியா? நல்ல சம்பளம்.“இல்லேப்பா.” “ஏன்ம்மா! முதலாளியை வந்து பாரேன்.” “உங்க முதலாளியை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. ஒரே இடத்துல அப்பா- மகள் வேலை பார்த்தா, பல பிரச்சினைகள் வரும்ப்பா. வேணாம்.” “என்னடீ பிரச்சினை... உனக்கு பாதுகாப்புதானே?” “ஏன்... இப்ப எனக்கு பாதுகாப்பு இல்லையா என்ன? அது வேண்டாம்மா.” பானு குறுக்கிட்டாள். “அப்பா! இந்த ஏப்ரல்ல என் ‘டிகிரி படிப்பு முடிஞ்சிடும். எனக்கு உங்க கம்பெனியில வேலை வாங்கிக் குடுங்க.” அதற்குள் சந்திரா புறப்பட்டாள். இருபது நிமிடங்களில் கோவிலை அடைந்துவிட்டாள். பழக்கப்பட்ட கோவில்தான். அர்ச்சனைக் கூடையைக் கொண்டு வந்து சந்திரா தர, பேர், நட்சத்திரம் கேட்டு குருக்கள் ஆரம்பிக்க, வாசலில் கார் வந்து நிற்க, ஒரு பெரிய மனிதன் தன் பரிவாரங்களுடன் இறங்க, குருக்கள் இவளை விட்டுவிட்டு அங்கே ஓடினார். கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் கொண்டு வந்த அர்ச்சனைப் பொருட்கள்- மாலைகளை வாங்கிக்கொண்டு, மந்திரம் சொன்னபடி உள்ளே போக... அந்தப் பெரிய மனிதரும் ‘ஸ்டைலாக நடந்து வர, அவருடன் ஓர் இளைஞன் வர“குருக்களே... நிறுத்துங்க.” சந்திரா கூச்சலிட, ‘படக்’கென அனைவரும் திரும்ப, “முதல்ல வந்தவ நான். என் அர்ச்சனையைத் தொடங்கிட்டு, அதைப் பாதியில் நிறுத்திட்டு ஓடினா என்ன அர்த்தம்?” குருக்கள் அருகில் வந்தார். “மெதுவா பேசும்மா! அவர் பெரிய மனிதர். ‘பிசி’யா இருப்பார். அவரை முதல்ல அனுப்பிட்டு உங்கிட்ட வர்றேன்.” “இது தப்பு! ஆண்டவன் சந்நதியில் பெரியவங்க- சின்னவங்கன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கே எல்லாருமே ‘பிசி’தான். நான் மட்டும் சும்மாவா இருக்கேன்?” கூட்டம் கூடிவிட்டது
© 2024 Pocket Books (Ebook): 6610000510603
Release date
Ebook: 16 January 2024
English
India