Step into an infinite world of stories
Fantasy & SciFi
ராகுல் காலையில் தாமதமாக எழுந்தான். குளித்து விட்டு உடை மாற்ற, டெலிபோன் ஒலித்தது. எடுத்தான். “ராகுல்! இப்ப மணி என்ன?” “குட்மார்னிங் மேம்! எட்டரை!” “ஒன்பது மணிக்கு போர்ட் மீட்டிங்! இன்னும் நீங்க வீட்டை விட்டே புறப்படலை!” குரலில் அதட்டல் இருந்தது. “வந்துட்டே இருக்கேன் மேம்!” அதை மறந்துவிட்ட ராகுல், பதட்டமாக புறப்பட்டான். சரியாக உடைகூட உடுத்திக் கொள்ள வில்லை! ஆபீசுக்கு வந்து விட்டான். காஞ்சனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்! “என்ன ராகுல் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? வாட் ஹேப்பன்ட்? சரி! போர்ட் மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா?” “இதோ பண்ணிர்றேன் மேடம்!” அவன் குரல் பிசிறடிக்க, கால்கள் நடுங்க, கம்பீரமான ராகுல் தொலைந்து போயிருந்தான். ராகுலை அழைத்தாள் காஞ்சனா. “இன்னிக்கு மீட்டிங் கேன்சல்! சொல்லிருங்க!” “மேம்! வேண்டாம். நான் இப்பவே...”“என் ரூமுக்கு வாங்க!” காஞ்சனா உள்ளே போய் விட்டாள். ராகுல் பின்தொடர்ந்தான். “ஒக்காருங்க ராகுல்!” “இருக்கட்டும்!” “என்னாச்சு? ஸிட்டவுன் ஐஸே!” சரக்கென உட்கார்ந்தான். “இப்ப நான் உங்க பாஸ் இல்லை. தோழி காஞ்சனா! சொல்லுங்க! நீங்க இப்படி டிஸ்டர்ப்டா இருந்து நான் பார்த்ததே இல்லை ராகுல்!” நிமிர்ந்து பார்த்தான். “நான் தெரிஞ்சுக்கக் கூடாத சொந்தப் பிரச்னையா இருந்தா, நீங்க சொல்ல வேண்டாம்!” “அப்படி எதுவும் இல்லை மேம்! என் சிஸ்டர் ரூபா ஒரு இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண மும்பை போயிருக்கா! தனியா இதுவரைக்கும் அனுப்பினதில்லை. அந்தக் கவலை, பயத்துல ராத்திரி முழுக்கத் தூங்கலை!” சிரித்தாள் காஞ்சனா! “வேடிக்கையா இருக்கு!” “இல்லை மேடம். அவ மேல வச்ச அளவு கடந்த பாசம்!” “தப்பு! பாசம், பந்தங்களை முடமாக்கக் கூடாது ராகுல். அவ பெண். தன்னம்பிக்கையோட தலை நிமிர வேண்டாமா? தனிச்சு போராட வேண்டிய கட்டாயம் இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் என்னிக்காவது ஒரு நாள் வந்தே தீரும். நீங்க கோழையாக்கி வச்சா, அவ என்ன ஆவா? கம்மான் ராகுல்!” அவன் பேசவில்லை. “என்ன கம்பெனி அது? தகவல் இருக்கா?” “பேர் ஞாபகம் இல்லை.சரி விடுங்க! செல்போன் வச்சிருக்காளா?” “இருக்கு மேம்! நான் முயற்சி பண்ணேன். ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா!” “எங்கே தங்கப் போறா உங்க தங்கை? விலாசம் இருக்கா?” “தந்துட்டுப் போயிருக்கா!” “இன்னமும் ரயில் போய் சேர்ந்திருக்காது. ஒரு மணி நேரம் கழிச்சு அவளே பேசுவா! இல்லைனா, நீங்க பேசுங்க! அப்படியும் நீங்க சமாதானமாகலைனா, ஃப்ளைட்ல புக் பண்ணித் தர்றேன். ராத்திரிக்குள்ள மும்பை போய்ச் சேருங்க! போதுமா?” “கோவமா மேம்?” எழுந்தாள் காஞ்சனா. மெல்ல நடந்தாள். “எங்கப்பா மல்ட்டி மிலியனர். இப்பவும் வருஷத்துல 300 நாட்களும் வெளிநாட்டுப் பயணம் பண்ணிட்டு இருக்கார். இங்கே நிர்வாகம் மொத்தமும் நான்தான்! விரலை அசைச்சா காலடில வந்து சேவகம் செய்ய ஒரு மினி அரசாங்கமே தயாரா இருக்கு! எதுக்கு? எல்லாருக்கும் பயம் இருக்கு. பின்னால ஆசையும், சுயநலமும் ஒளிஞ்சுகிட்டிருக்கு! பாசம் காட்ட ஒரு ஜீவன் கூட இல்லையே ராகுல்?” முடிக்கும் போது குரல் கரகரத்தது. ஒரு நொடி திடுக்கிட்டான் ராகுல்! சட்டென சிரித்தாள். “லிவிட்! அதுக்காக நான் வருத்தப்படலை. ஜஸ்ட்லைக்தட் சொன்னேன்! உருகிட்டு ஒக்காந்தா பிஸினஸ் வருமா? ஓக்கே! எல்லாத்தையும் விலைக்கு வாங்க வேண்டியதுதான். அஃப்கோர்ஸ்! பாசத்தையும்தான். அது தரமா ஐ எஸ் ஐ முத்திரையோட எங்கே கிடைக்கும் ராகுல்?” வெகு இயல்பாகப் பேசினாலும், வார்த்தைகளில் வலி தெரிந்தது.
© 2024 Pocket Books (Ebook): 6610000510993
Release date
Ebook: 16 January 2024
English
India