Step into an infinite world of stories
Fantasy & SciFi
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் களைகட்டி இருந்தது. மக்கள் பரபரப்புடன் இங்கும் அங்குமாய் ஓடிக்கொண்டு இருந்தார்கள். காரணம்... டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் விரைவு ரெயில் இன்னும் பத்து நிமிடங்களில் சென்னைக்கு வந்து சேரும் என்ற அறிவிப்புதான். இளம் நீலநிற சல்வாரில்... தன் தோழியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் பிரியங்கா! முகத்தைக் கழுவி துடைத்தபடி தன் இருக்கையில் வந்து அமர்ந்த சித்தரஞ்சனை ஏறிட்டார் பரணிதரன். “கொஞ்சம் பவுடர் போட்டுக்க சித்து! சென்னையிலே பொண்ணுங்க ரொம்ப அழகாய் இருப்பாங்களாம்!” என்றார் கிண்டலாய். “ஐம்பது வயசானாலும் குறும்பு போகலேப்பா உங்களுக்கு! இந்த வயசிலேயே இவ்வளவு விளையாடறவர் என் வயசிலே எப்படியெல்லாம் ஆட்டம் போட்டு இருப்பீங்களோ?” “அதை என் கேட்கறே? உன் வயசிலே நான் உன்னைவிடவும் அழகா இருப்பேனாக்கும்! பொண்ணுங்களோட கூட்டம் என்னைச் சுற்றி எப்பவும் இருக்கும். நான் காதலிக்க மாட்டேனான்னு ஏக்கமா வருவாளுங்க... எனக்கும் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைதான்! ஆனால், விதி யாரைவிட்டது? சின்ன வயசிலே இருந்தே.... விசாலத்துக்குப் பரணிதான், பரணிதரனுக்கு விசாலம்னு எங்க அப்பா மிரட்டி மிரட்டி வளர்த்துட்டார். வேற வழி இல்லாம மனசையும், கண்ணையும் பொத்திக்க வேண்டியதாப் போயிடுச்சு. கடைசியில் உங்க அம்மாவையே கட்டிக்கிட்டேன். நீயும் பொறந்தே! சாமியாராட்டம் வளர்ந்துட்டே!” “போதும்ப்பா... நான் உங்ககிட்டே இந்தக் கேள்வியை கேட்டிருக்கக்கூடாது. சென்னை வந்தாச்சு. பை, பெட்டியைச் சரிபார்த்து எடுத்துக்குங்க...” என்றான் செல்லமாய்ச் சலித்தபடிஅப்பவே எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஏன் சித்து எல்லாத்தையும் சீரியசா எடுத்துக்கறே....? ஜாலியா எடுத்துக்க...!” “அய்யோ.... நான் சீரியசா எடுத்துக்கலேப்பா... அந்த தண்ணி பாட்டிலை மட்டும் என் கையிலே கொடுத்திடுங்க!” “டெல்லி வெயில் உன்னைத் தாகப் பறவையா மாத்திடுச்சி! எப்பவும் பாட்டிலும், கையுமா அலையரே... அதாவது... தண்ணி பாட்டிலைச் சொல்றேன்...” சித்தரஞ்சன் அப்பாவின் பேச்சை ரசித்தபடி அவர் நீட்டிய தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டான். . அடுத்த இரண்டாவது நிமிடம் விரைவு ரெயில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பரணிதரன், பெட்டிகளைச் சுமந்தபடி இறங்கி நடந்தார். “ஏம்ப்பா... அத்தனை பையையும் சுமக்கறீங்க...? அந்தத் தோல் பையையும், பெட்டியையும் இப்படிக் கொடுங்க!” “இது அந்தக் காலத்து உரமேறிய உடம்பு! அதுவும் காவிரித் தண்ணியை குடிச்சு வளர்ந்த உடம்பு! தண்ணி பாட்டில் குடிக்கிற பசங்களால ஒரே ஒரு தோல் பையை மட்டும்தான் சுமக்க முடியும். நீ இந்த ஒரு பையை மட்டும் எடுத்துக்கிட்டு வா! அதற்குள் நான் கார் பிடிச்சிடுறேன்!” என்றபடி மிடுக்கான நடையுடன் சென்றார். பரணிதரன் எப்பவும் இப்படித்தான்! ஒரே மகன் சித்தரஞ்சன் மீது கொள்ளை பாசம் வைத்திருந்தார். அவனை ஒரு வேலையும் செய்யவிடமாட்டார். இப்படி அப்படி என்று கிண்டல் செய்து அவனை ஒரு ஓரமாய் உட்கார வைத்துவிட்டு எல்லாவற்றையும் தானே செய்வார். அப்பாவை நினைத்து சித்தரஞ்சன் தனக்குத்தானே சிரித்தபடி, மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தான். பிரியங்கா முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி விரைந்து நடந்தாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000510702
Release date
Ebook: 13 January 2024
English
India